பக்கம்:பொன் விலங்கு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 - பொன் விலங்கு

'அறையை பூட்டாமல் திறந்திருந்தாலும் எனக்கு இது சிறைக்கூடமாகத்தான் இருக்கும் மனத்திற்குப் பிடிக்காத இடத்தில் கால்கள் நிற்பதே சிறைதான். நான் தப்பி ஓடிப்போய்த் தற்கொலை பண்ணிக்கொண்டுவிடக் கூடாதே! அதற்காகத்தான் ஜமீன்தார் எனக்கு இத்தனை பாதுகாப்புப் எண்ணி வைத்திருக்கிறார். நான் செத்துப் போகவும் எனக்குச் சுதந்திரம் இல்லை."

"கவலைப்படாதே என்றாவது ஒருநாள் நீ உன் மனம் விரும்புகிறபடி கெளரவமான வாழ்வை அடையமுடியும். தெய்வம் உன்னை வாழவைக்கும் உன் தூய நம்பிக்கைகள் என்றாவது வெற்றிபெறும்..."

"என் தெய்வம் நீங்கள் தான்! எப்போதும் இந்தக் கால்கள் உங்கள் பின்னால் நீங்கள் போகிற வழியில் நடந்துவரத் தயாராகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய அழகும் கலைத் திறனும் எனக்குப் பெரிய பகைகள். நான் நினைக்கிறபடி வாழக் கொடுத்து வைக்கவில்லை. பிறந்ததிலிருந்து அழுகைதான் என்னுடைய செளபாக்கியம்! என்னுடைய வாழ்வு ஓர் உறுதியில்லாத கனவாயிருக்கிறது. நீங்கள் என்னை வாழ வைப்பீர்கள். ஆனால் அப்படி முன்வருகிற உங்களை உலகமும் மற்றவர்களும் வாழவிட மாட்டார்கள்."

"ஜமீன்தார் உன்னிடம் என்னவிதமான வாழ்வை எதிர் பார்க்கிறார்?' - . . . . . . . . . - -

“இந்தக் கேள்வியே மகாபாவம். இதற்குப் பதில்சொல்கிற பாவத்தை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை." -

"கேள்வி கேட்காமல் நான் எப்படி எதைத் தெரிந்து கொள்ள முடியும், மோகினி ஆனால் நீயோகேள்வி கேட்பதே பாவம் என்று சீறுகிறாய்!" . . . . . . . . . " ... . . . .

"சீறாமல் பின் என்ன செய்வேன்? பந்தல் போட்டு, கற்றமும் உறவும் அழைத்து மேளதாளத்தோடு மாலை மாற்றிக் கொண்டால்தான் கலியாணமா? ஆண்டாள் அரங்கநாதரைப் பாவித்ததுபோல் உங்களை மணந்து, உங்கள் மனைவியாகவே என்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறேன் நான், உங்கள் மனைவியிடமே நீ யாரோடு வாழ விரும்புகிறாய்?" என்று நீங்கள்

கேள்வி கேட்பது பெரிய பாவமில்லையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/486&oldid=595736" இலிருந்து மீள்விக்கப்பட்டது