பக்கம்:பொன் விலங்கு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 பொன் விலங்கு

மறுபடியும் அவள் அவனைப் பார்த்தபோது அந்தப் பேதையின் முகம் கலக்கமில்லாத பேரமைதியோடிருந்தது.

அவளுடைய வேண்டுகோளைக் கேட்டுச் சத்தியமூர்த்தி கண் கலங்கிய அதே வேளையில் வாழ்க்கையின் சகலவிதமான திருப்பதிகளையும் அடைந்து இதய பூர்வமாக அவற்றை அங்கீகரித்துக் கொண்டு விட்டாற்போலச் சலனமற்றிருந்தாள் அவள் மனத்தின்திருப்தியும் தியாகமும் தெரிகிறதுய பார்வையால் அவளுடைய கண்களின் அழகு அப்போது பெருகியிருந்தது. கண்களில் உள்ள மோகன மயக்கத்தாலும் கவர்ச்சியாலும் பெண்களுக்கு மதிராட்சி' என்று சில கவிகள் பெயர் சூட்டிப் புனைந்துரைத்திருப்பதை நினைத்தான் சத்தியமூர்த்தி. திராட்சை மதுவைப்போல் கண்கள் என்று பாடியவன் உணர்ச்சி மிக்க கவியாயிருக்க வேண்டும். -

மேல் வானத்து நீல முற்றத்தில் சில வேளைகளில் மிதக்கும் ரோஸ் மேகங்களைப்போல் சிவந்த அந்த முகமும், அந்த முகத்துக்குரியவளின் செம்மை பூவிரிக்கும் உள்ளங்கைகளும் செம்மை அரும்பிப் பளபளக்கும் இதழ்களுமாகப் பார்வையே பேசுவதாய் நின்றாள் அவள். அந்தக் கண்கள் அவனிடமிருந்து எதையோ கேட்டன. எதற்கோ ஏங்கின. சிரிக்க விரும்பாத சூழ்நிலைகளில் பழகிப் பழகிச் சோகமே நிரந்தர உணர்ச்சியாகி விட்டாலும் அவளுடைய அந்த உதடுகளில் சிரிப்பு மறைவாய் உறங்கிக் கொண்டிருந்தது. புறப்படாத மோனமாக ஒரு புன்னகை அங்கே தயங்கி நின்றது. அவள் சற்றுமுன் அவனிடம் வாக்குறுதியும் வேண்டுகோளும் கேட்டிருந்த கோமளமான மெல்லிய குரல் இன்னும் அவன் செவிகளில் ராகமாய், அநுராகமாய் இனிமை கவிந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

44

米 விரும்பியதை அடைய முடியாமற் போவதும் விரும்பாததை அடைந்து விடுவதும்தான் துர்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/488&oldid=595738" இலிருந்து மீள்விக்கப்பட்டது