பக்கம்:பொன் விலங்கு.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 511

"என்ன பேசினார் அவர்?' என்று வெறுப்புடனும், சற்றே அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் வினவினான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் சிரித்துக்கொண்டே இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார்:

'ஜமீன்தாரோ இல்லையோ? ஆள் சரியான முரட்டுப் பேர்வழி போலிருக்கிறது. ஆட்கள் கைகட்டி வாய் பொத்தி பயத்தோடு விலகி நிற்கிற மாதிரி பேசும் பாஷைகள் கூடப் பக்கத்தில் நெருங்க அஞ்சுகின்றன. ஆங்கிலம் அருகில் வருவதற்கே பயப்படுகிறது. தமிழ் கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. ஆனால் மனிதர் அதைச் சித்திரவதை செய்து விடுகிறார். நீங்கள் என்னைப் பாராட்டிக் கெளரவித்தீர்கள். பூபதி உயிரோடிருக்கும்போதே இந்தக் காலேஜ் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளணுமின்னு ரொம்ப ரொம்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நான்தான் வேண்டாமின்னு சொல்லி மறுத்து வந்தேன். இப்போது இந்தப் பொறுப்பு என் தலையிலே விழுந்திருச்சு. உங்களில் சில ஆசிரியர்கள் பணிவும் மரியாதையும் தெரியாதவர் களாக இருக்கிறீர்கள். திருந்திக் கொள்ளாவிட்டால் நல்லதில்லை. உங்களுக்கு என்நன்றி. வாழ்த்துக்கள்" என்று சுந்தரேசன் வெறுப்புக் கலந்த உற்சாகத்தோடு அதை இமிடேட் செய்தார்.

'முதற் கூட்டத்தில் நாலைந்து நிமிஷம் பேசுவதற்குள்ளேயே இப்படி ஆசிரியர்கள் தலையில் நிறையக் கல்லைத்துக்கிப் போட்டு விட்டார் என்று சொல்லுங்கள்' என்று குமரப்பன் சுந்தரேசனிடம் குத்தலாகக் கேட்டான். சுந்தரேசன் இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார். - -

'பெரிய மனித லட்சணங்களில் இதுவும் ஒன்று குமரப்பன்! ஒரு பெரிய மனிதன் என்றால் குறைந்த பட்சம் தாய் மொழியில் நாலு வாக்கியம் தப்பாகவாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். இது இன்னும் உத்தமம். மஞ்சள்பட்டி ஜமீன்தாரோ ரொம்ப ரொம்பப் பெரிய மனிதர். அதனால்தான் தாய்மொழியும் அவருக்கு நன்றாகத் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது' என்று சத்தியமூர்த்தி குறுக்கிட்டுப் பேசினான். அவனுடைய இந்தப் பொய்ப் புகழ்ச்சியில் வெறுப்பும் அலட்சியமும் தொனித்தன. அப்போது குமரப்பன் வேறொரு குறிப்பை நினைவூட்டினான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/513&oldid=595767" இலிருந்து மீள்விக்கப்பட்டது