பக்கம்:பொன் விலங்கு.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 521

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களுடைய எக்ஸ்பிளநேஷனைப் படித்தேன்! நான் கேட்டதற்குப் பதில் இல்லை!... வேறு என்னென்னவோ வளைத்து வளைத்து எழுதியிருக்கிறீர்கள்."

'வளைத்து வளைத்து எதையும் எழுதவில்லை சார்! நீங்கள் ஏதேதோ குற்றங்களையெல்லாம் என் மீது சுமத்தியிருந்தீர்கள். அந்தக் குற்றங்களை நான் செய்யவில்லை என்று விளக்கம் எழுதியிருந்தேன்." - - -

"அப்படியில்லை! நேற்று நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய போது நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கலாம். நீங்கள் வர மறுத்தது உங்களுடைய 'அர்ரகென்ஸை (திமிரை)த் தானே காண்பிக்கிறது? நீங்கள் உங்களைப் பற்றி ரொம்பவும் டு. மச் ஆக (அதிகமாக) நினைத்துக் கொண்டு விட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்."

'வகுப்பைப் பாதியில் விட்டுவிட்டு வருவதற்கு நான் தயாராக இல்லை சார் வகுப்பைப் பாதியில் விட்டாலும் பரவாயில்லை! உங்களை உடனே பார்த்தாகவேண்டும் என்று நீங்கள் எழுத்து மூலம் எழுதி அனுப்பியிருந்தால் வந்திருப்பேன்."

'நான் எப்படி எதைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்?'

நான் உங்களுக்குக் கீழே வேலை பார்க்கிற ஒரு சாதாரண விரிவுரையாளன்தான்! ஆனால் நான் மதிக்கவும்-வணங்கவும் தலைவராக ஏற்றுக் கொள்ளவும் உங்களிடம் சில குறைந்த பட்சத் தகுதிகளாவது இருக்க வேண்டும் என்று என் மனம் ஒவ்வொரு விநாடியும் உங்களிடம் தகுதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறதென்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது."

"நான்ஸென்ஸ் நீங்கள் எல்லை மீறிப் பேசுகிறீர்கள்!"

必赢 。爱建

"பல காரணங்களால் உங்களைப் போன்ற ஒருவர் டிபுடி வார்டனாக இருப்பதை நானும்-நிர்வாகியும்-வார்டனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/523&oldid=595778" இலிருந்து மீள்விக்கப்பட்டது