பக்கம்:பொன் விலங்கு.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 பொன் விலங்கு

மாணவர்கள். நான்கு நாட்களாக இதே நிலைமை நீடித்தது. கல்லூரி விடுதியில் சிற்றுண்டியும், பகல், இரவு உணவுகளும் நாடுவாரின்றி வீணாகச் சீரழிந்தன. "ஸ்டிரைக்கில் சேர்ந்திருக்கிற முதலாண்டு மாணவர்களை எல்லாம் செலக்ஷனில் தொலைத்து விடுவேன், தொலைத்து மரியாதையாக விடுதிக்கு சாப்பிடச் செல்லுங்கள். ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து சேருங்கள்" என்று பிரின்ஸிபால் மிரட்டியது.பயன்படவில்லை. சத்தியமூர்த்தி மாணவர்களின் இந்த விதமான குமுறலையும் கொதிப்பையும் தடுக்க நினைத்தாலும் முடியவில்லை. - -

"அவர்கள் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள்; எனக்காக மட்டும் போராடவில்லை. அவர்களை நான் தடுத்தால் 'நானே கல்லூரி முதல்வர் செய்தது நியாயம் என்று ஒப்புக் கொள்வது போலாகும்' என்பதாக எண்ணி அவன் அமைதியாக இருந்தான். நான்காவது நாள் மாலை முதல்வரும், நிர்வாகியும் இரகசியமாகச் சந்தித்து ஸ்டிரைக்கை எப்படி ஒடுக்குவது என்று பேசி ஆலோசனை செய்து சத்தியமூர்த்திக்கு இன்னொரு குற்றச்சாட்டு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். அதில் மாணவர்களை அவன்தான் "ஸ்டிரைக்' செய்யத் தூண்டினான் என்றும், ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபடாவிட்டால் உடனே அவனை விரிவுரையாளர் பதவியிலிருந்தும் 'ஸஸ்பெண்ட் செய்ய நேரும் என்றும் பயமுறுத்தியிருந்தார்கள்.

'நான் யாரையும் எதற்கும் துண்டவில்லை. நீங்கள் தான் உங்கள் செய்கைகளில் மூலம் அருமையான மாணவர்களை இப்படி யெல்லாம் ஆவேசம் கொள்ளும்படித் தூண்டியிருக்கிறீர்கள். அவர்கள் கோருகிற நியாயத்தைத் தடுக்க எனக்கே உரிமை இல்லை. அவர்கள் உங்களிடம் நியாயம் கேட்கிறார்கள். நீங்கள் அதை அளிக்க முயற்சி செய்வதுதான் அவர்களை ஸ்டிரைக்கிலிருந்து மீளச் செய்வதற்கு வழி என்று கல்லூரி முதல்வருக்குச் சுருக்கமாகப் பதில் அனுப்பிவிட்டான் அவன். ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியை அணுகி நின்றாலே கேடு வருமோ என்று அஞ்சினார்கள். மிகச் சில நாட்களில் அங்கே அவன் தனியானான். அவன் வந்து போகிற வழியும் யாரும் துணையற்ற தனி வழியாகியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/530&oldid=595786" இலிருந்து மீள்விக்கப்பட்டது