பக்கம்:பொன் விலங்கு.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 பொன் விலங்கு

செய்கிறாற்போல் அவனுடைய தகப்பனார் மூலமே ஒரு நிர்ப்பந்தத்தை அவனுக்கு உண்டாக்கிவிட முடியு மானால் நல்லதென்றுதான் அவருக்குத் தோன்றியது. அப்படி நடந்தால் மாணவர்களுக்கும் அவன் மேல் உள்ள பற்றுதல் குறைந்து போகும். கோர்ட், கேஸ் என்று வளர்ந்து ஹாஸ்டலுக்கு நெருப்பு வைத்ததற்குச் சத்தியமூர்த்தியின் தூண்டுதலோ, மாணவர்களின் செயலோ காரணமில்லை என்று நிரூபணமாகிவிட்டால் என்ன செய்வதென்ற பயமும் ஜமீன்தாருடைய மனத்தில் இப்போது மூண்டிருந்தது.

ஒரு பெண் தன் அந்தரங்கத்தி லிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்க மாகத் தெரிவித்துக் கொள்ளத்தான்

எத்தனை ஆயிரம் தடைகள்?

இனிமேலாவது நல்ல காரியங் களைச் செய்து நல்லபடியாக வாழலாம் என்ற நினைப்பதற்குப் பதில், இதுவரை செய்திருக்கிற தவறுகளையும், இனிமேல் செய்யப்போகிற தவறுகளையுமே நல்ல காரியங்களாக நிரூபித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கிற வறட்டுக் கெளரவத்தைச் சிலரால் விட்டுவிட முடியாது. மஞ்சள்பட்டியார் இந்த விதத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தியின் தந்தையைக் கூப்பிட்டு அவனை அடக்கி வழிக்குக் கொண்டு வருமாறு சொல்லியதோடு நிற்காமல் அதற்கு முன்பே ஜமீன்தார் வேறு சில ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தம்முடைய சொந்தப் பத்திரிகையாகிய குத்து விளக்கில் அந்த வாரம் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்து, மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டுமென்று கண்டித்தும் தலையங்கம் எழுதச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி விடுதியின் கூரை ஷெட் நெருப்புப் பிடித்து எரிந்த காட்சியைப் புகைப்படமாகப் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/558&oldid=595815" இலிருந்து மீள்விக்கப்பட்டது