பக்கம்:பொன் விலங்கு.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 - பொன் விலங்கு

செய்து வருகிற காரியங்கள். நாம் ஏன் அவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படவேண்டும்?' என்று குமரப்பன் அலட்சியமாக மறுமொழி கூறியிருந்தான். அதே குத்துவிளக்கில்தான் இப்போது மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்தும், ஜமீன்தாருடைய நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும், தலையங்கங்கள் வெளிவந்திருந்தது. குத்துவிளக்கின் இந்த அடாத செயலை எதிர்த்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டுவதற்காக மல்லிகைப் பந்தல் கல்லூரி மாணவர்கள் அந்த வாரம் கட்டுக்கட்டாக அந்தப் பத்திரிகைப் பிரதிகளை விலைக்கு வாங்கிப் பொது இடங்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள்.

"நல்லாக் கொளுத்தட்டும் நமக்கென்னா வந்திச்சு? உள்ளுர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு' என்று ஜமீன்தார் இதைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீன்தார். -

அந்த வாரத்துக் குத்துவிளக்கு' இதழ் வெளியாகி நெருப்புக்கிரையான பின்னும் நம்பிக்கை போய்விடாதபடி அதற்கு மறுதினம் மோகினியை அழைத்துக்கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த சத்தியமூர்த்தியின் தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி மகனை ஒடுக்கிவிடலாம் என்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீன்தாரிடம் சமயம் பார்த்துச் சொல்லிக் கொடுத்திருந்தார். அந்த யோசனையை மறுக்க முடியாமல் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. காலஞ்சென்ற பூபதியின் மகள் என்ற உரிமையோடு பாரதி கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி இனி எதுவும் விசாரிக்க வாய்ப்பில்லாதபடி அவளை மோகினியிடம் நாட்டியம் படித்துக்கொள்ளச் சொல்லத் தந்திரமாக ஒதுக்கிவிட்டிருந்தார் ஜமீன்தார். மோகினி மல்லிகைப் பந்தலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/560&oldid=595818" இலிருந்து மீள்விக்கப்பட்டது