பக்கம்:பொன் விலங்கு.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி r 559

வந்து சேர்ந்த மறுதினம் காலையில் ஜமீன்தார் அவளையும் பாரதியையும் வற்புறுத்தி நாட்டிய டியூஷனைத் தொடங்கி வைத்துவிட்டார். மோகினிக்கும் நாட்டியம் கற்பிப்பதற்கேற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. பாரதிக்கும் நாட்டியம் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. இரண்டு பேரும் ஜமீன்தாருடைய கூப்பாட்டுக்குப் பயந்து கற்பிப்பது போலவும் கற்றுக்கொள்வது போலவும் நடிக்க வேண்டியிருந்தது. அடவு, விளம்ப காலம், மத்திய காலம், துரிதகாலம், திஷ்ரஜதி, சதுரஸ்ரஜதி,கண்டஜதி, மிஸ்ரஜதி, சங்கீர்ண ஜதி, என்று சில வார்த்தைகள் காதில் விழுகிறவரை உடன் உட்கார்ந்திருந்து மருட்டி விட்டு அப்புறம் ஜமீன்தார் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுவிட்ட துன்பங்களாலும், தந்தையை இழந்த சோகம் மாறாத மன நிலையாலும் பாரதி தளர்ந்திருந்தாளே ஒழிய உண்மையில் மோகினியைப் போல் பரத நாட்டியக் கலையில் வசீகரமான தேர்ச்சியுள்ள ஒருத்தியிடம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கே அந்தரங்கமாக உண்டு. ஜமீன்தார் எழுந்திருந்து போன பின்போ பாரதியின் ஆசை வேறு விதமாகத் திரும்பியது. "அக்கா, நீங்க ஆடுங்க...நான் பார்க்கிறேன்" என்று சொல்லித் தாயே யசோதா என்ற தோடி ராகக் கீர்த்தனத்துக்கும், நாதர் முடிமேல் என்ற புன்னாகவராளிப்பாட்டிற்கும்மோகினியை ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தாள் பாரதி. -

ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வானவில்லைப் போலவும், பூமியில் உள்ள பல நிற மலர்களாலும் தொடுத்த பூமாலையைப் போலவும் மோகினி சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு பாரதி அபூர்வமான சொப்பனங்கள் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கே போய்விட்டுத் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள். மோகினி ஆடி முடித்த பின்பு அந்த இடத்தைச் சுற்றிலும் அழகின் நவசர நயங்களும் பாவனைகளும் வந்து காத்துக் கட்டுண்டுகிடப்பனபோல் ஒருசூழ்நிலை உருவாகியிருந்தது. வியப்பு மிகுதியினால் உணர்ச்சி வசப்பட்ட பாரதி,"அக்கா இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள் இப்படியே உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/561&oldid=595819" இலிருந்து மீள்விக்கப்பட்டது