பக்கம்:பொன் விலங்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பொன் விலங்கு

அக்கெளண்ட், காஸ்ட் அக்கெளண்டன்ஸி போன்ற துறைகளில் தேர்ந்து பெரிய ஆடிட்டராகிப் பணம் குவிக்க வேண்டும் என்றுதான் அவன் தந்தையும் எதிர்பார்த்தார். அவன் தமிழில் மோகமுற்றுத் தமிழ் ஆனர்ஸ் தேறி எம்.ஏ. ஆகி இப்படிக் கல்லூரி விரிவுரையாளனாகப் போக நேரிடும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அதில் அவருக்கு ஏற்பட்ட வருத்தமும் ஏமாற்றமும் அதிகம்தான். ஆயினும் உடம்பாலும், மனத்தாலும், தன்னை மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை என்ன சொல்லி எப்படித் தடுப்பதென்று தோன்றாமல் 'அவன் போக்குப்படியே போகட்டும் என்று விட்டுவிட்டார். ஆசிரியர் தொழிலில் தான் இருந்து பட்ட துன்பங்களை எண்ணித்தன் பிள்ளையாவது அந்தத் தொழில் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அந்த ஏழைத் தந்தை கவலைப் பட்டதெல்லாம் வீணாகப் போயிற்று.

"சத்யம்? நீயாவது 'டானா உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணியைப் போல் நீ சாத்திய இடத்திலேயே சார்த்திக் கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர்மேலே ஏறிப்போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது' என்று தந்தை ஏமாற்றத்தோடு கூறிய பல வேளைகளில் அதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டு சிரித்து விட்டுப் பதில் பேசாமல் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. அப்படிஎல்லாம் அவர் அந்தத் தொழிலை வெறுத்துப்பேசியிருந்தும் கூட நேற்று அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன்பு, "சத்யம் குடும்பத்தைஇன்னும் உன்னை எதிர்பார்த்துத்தவிக்கவிடாதே அப்பா உத்தியோகத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் பிடிவாதமாக இருந்துவிட்டாய்.உத்தியோகத்துக்குப்போவதற்குஇன்னும் நீதாமதம் செய்தால் தண்ணீரில் ஒட்டைப் படகைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம் நிச்சயமாகத் தாங்காது. இண்டர் வியூவை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆர்டரைக் கையில் வாங்கிக் கொண்டு வந்து சேர்வதற்கு முயற்சி செய்" என்று பாதி ஆர்வமும் பாதி நைப்பாசையுமாக அவனிடம் சொல்லியனுப்பியிருந்தார்.

இரயிலிலிருந்து இறங்கி நேரே வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினால் அந்த அகால நேரத்துக்கும் விழித்திருந்து எழுந்து வந்து கதவைத் திறக்கக் கூடியவர் அப்பாதான். கதவைத் திறந்துவிட்டுத் தன்னை எதிரே பார்த்தவுடன் 'ஏண்டா, இண்டர்வ்யூ என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்கப் போகிற அவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/58&oldid=595839" இலிருந்து மீள்விக்கப்பட்டது