பக்கம்:பொன் விலங்கு.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 587

உங்களையெல்லாம் கூப்பிட்டுப் பேசுவாராம். இப்போது இதே காரியமாக வேறு சிலரோடு பேசிக் கொண்டிருப்பதனால் உங்களை நாளைக்குக் கூப்பிட்டு அனுப்புவதாகச் சொன்னார்' என்று தெரிவித்தபோது ஜமீன்தாருக்கு முகத்தில் அறைந்தாற் போலாகி விட்டது. 'வெள்ளைக்காரன் ராஜாங்கம் நமக்கு ஸர் பட்டம் கொடுத்தப்ப அதைப் பாராட்டித் தன் சந்தோஷத்தைத் தெரிவிச்சுக் கறதுக்காக அப்ப கலெக்டராயிருந்த துரையும், துரைச்சானியும் மஞ்சள்பட்டி அரண்மனைக்குத் தேடிக்கிட்டு வந்தாங்க...இப்ப என்னடான்னா முந்தாநாள் பயலுகளெல்லாம் கலெக்டரா வந்து பெரிய மனுசங்கிட்ட மரியாதை தெரியாம நடந்துக்கறாங்க. இவரு கூப்பிட்டு அனுப்புவாராம்...நான் வரணுமாம்.அதையுந்தான் பார்க்கலாமே" என்று திரும்பிப் புறப்படுவதற்காகக் காரில் ஏறியபின் கண்ணாயிரத்திடம் கலெக்டரைப்பற்றிச்சொல்லிச்சீறினார்ஜமீன்தார். வீட்டுக்குத் திரும்பியதும் அன்றிரவே ஜமீன்தாருக்கு ப்ளட் பிரஷர் லோவாகிப் படுக்கை போட்டு விட்டது. டாக்டர் வந்து பங்களாவிலேயே தங்கியிருந்தார். м :

மறுநாள் கலெக்டரும் டி.எஸ்.பி.யும் காலையில் கல்லூரியைச் சுற்றிப் பார்த்தார்கள். முதலில் மாணவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றைச்சந்தித்துப்பேசினார்கள். அப்புறம்சத்தியமூர்த்தியோடு சேர்ந்து அவனுடைய துண்டுதலுக்குட்பட்டு ஹாஸ்டல் ஷெட்டுக்கு நெருப்பு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவர்களையும், நெருப்பு வைக்கும்போது பார்த்ததாகச் சாட்சி கூறியிருந்த இரண்டு சமையற்காரர்களையும், ஒரு நைட் வாட்ச்மேனையும் கூப்பிட்டு விசாரித்தார்கள். கலெக்டரை அருகில் வைத்துக்கொண்டு அந்த மூன்று சாட்சிகளையும் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்டார் டி.எஸ்.பி. "நிஜத்தைஅப்படியே சொன்னால் பிழைத்தீர்கள் உங்களை யாராவது பயமுறுத்துகிறார்கள் என்பதற்காகவோ பணம் கொடுத்து ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவோ, பொய்ச் சாட்சி சொன்னீர்களோ வருஷக்கணக்கில் உள்ளே இருந்து கம்பி எண்ண நேரிடும்! ஜாக்கிரதை' என்று அவர் மிரட்டியபோது முதலில் சமையற்காரர்கள் அழுதுகொண்டே உண்மையைக் கூறிவிட்டார்கள். அப்புறம் வாட்ச்மேனும் பயந்து போய் உண்மையைக் கக்கிவிட்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/589&oldid=595849" இலிருந்து மீள்விக்கப்பட்டது