பக்கம்:பொன் விலங்கு.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 பொன் விலங்கு

'நெருப்புப் பிடித்துக்கொண்டு எரிந்தது மட்டும்தான் தங்களுக்குத் தெரியும் என்றும் சத்தியமூர்த்தியும் மாணவர்களும் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகக் கூறியது மேலே உள்ள அதிகாரிகளும் நிர்வாகியும் பயமுறுத்தியதற்காகக் கூறிய பொய்' என்றும் அந்த மூவரும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். கடைசியாக பிரின்ஸிபாலைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவரும் மென்று விழுங்கினார். கலெக்டரும், டி.எஸ்.பி.யும் பிரின்ஸிபாலுக்கு அறிவுரை கூறினார்கள். பிரின்ஸிபாலுக்குத்தலை குனியும்படியான நிலைமையாகி விட்டது. ...

"நாம் படித்தவர்கள் என்பதை நிரூபிக்க ஏதாவது நல்ல காரியங்களைச் செய்தால் மட்டுமே போதும் சார் மானேஜ்மென்டிற்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்று பையன்களையும், நல்ல ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டுவிடக் கூடாது. நீங்கள் நிறையப் படித்தவர். நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளையிலிருந்து ஒழுங்காகக் காலேஜ் நடைபெற வேண்டும். நீங்களும், நிர்வாகிகளும் ஒத்துழைத்து இப்படியெல்லாம் ஒரு தனி ஆசிரியரையும், மாணவர்களையும் கெட்ட பெயர் வாங்கச் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறபோது ரொம்ப வருத்தமா யிருக்கிறது.நான்ஐ.ஏ.எஸ்.பாஸ் செய்து கலெக்டராகவருவதற்கு முன் சத்தியமூர்த்திக்கு விரிவுரையாளராக இருந்திருக்கிறேன். எனக்கு அவனை நன்றாகத் தெரியும். அவனுக்குப் பொய் பேசத் தெரியாது. உண்மைக்காக முரண்டும் பிடிவாதமும் செய்கிறவன் அவன், அவனைப்போல் தங்கமான மாணவனாக அந்த நாளிலேயே நான் வேறொருவனைப் பார்த்ததில்லை. நீங்களும் நிர்வாகிகளும் சத்தியமூர்த்தியைப் பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று வெளியே பரவினால் கல்லூரியின் பெயரும், நிர்வாகிகளின் பெயரும் உங்கள் பெயரும் கெடும்" என்று சொல்லி விட்டுக் கலெக்டர் தம் பேச்சை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு பிரின்ஸிபாலின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/590&oldid=595851" இலிருந்து மீள்விக்கப்பட்டது