பக்கம்:பொன் விலங்கு.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 பொன் விலங்கு

அவர்கள் அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வதற்கோ ஒத்துழைக்காமல் போவதற்கோ கல்லூரி என்பது குழப்பங்களும் போராட்டங்களும் நிறைந்த தொழிற்சாலையல்ல என்பதையும் விளக்கி அறிவுரை கூறினார்கள் அவர்கள். எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. ஜமீன்தார் லோ பிளட்பிரஷரில்படுத்தவர்படுத்தவர்தான்.சாயங்காலம் கல்லூரி முதல்வர் நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்கச் சென்றிருந்தபோது கண்ணாயிரத்திடம்தான் எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டி யிருந்தது. ஜமீன்தாரின் உடல்நிலையை எண்ணி அந்தச் செய்திகளை அவரிடம் அப்போது தெரிவிக்க வேண்டாமென்று டாக்டர் தடுத்துவிட்டார். கண்ணாயிரம் கல்லூரி முதல்வரைஏதோகோபித்துக் கொள்ளத் தொடங்கியபோது, "காலேஜை எப்படி நடத்தறதுன்னு எனக்கு நீங்கள் சொல்லித் தெரிய வேண்டாம் தயவு செய்து உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்” என்று முதல்வரிடமிருந்து மிகவும் கடுமையாகப் பதில் வந்தது. டிரைவர் முத்தையா பின்புறமாகத் தோட்டத்துப் பக்கம் போய் பாரதியிடம் நடந்தவற்றைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். சத்தியமூர்த்தியின் உண்மை வென்று விட்டதென்ற செய்தி அவளைப் பூரிக்கச் செய்தது.

ஆனால், அதே மாலை வேளையில் மல்லிகைப் பந்தலின் டிராவலர்ஸ் பங்களா வாசலில் இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுவதாயிருந்த சத்தியமூர்த்தியின் முன்னாள் விரிவுரையாளராகிய இன்றைய கலெக்டர் அவனைக் கூப்பிட்டு மிகவும் அந்தரங்கமாக அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றை அவனுக்குக் கூறிக்கொண்டிருந்தார். அந்த கலெக்டரின் பழைய மாணவனான குமரப்பனும் அப்போது உடனிருந்தான். சத்தியமூர்த்தியை அருகில் வந்து தட்டிக்கொடுத்து விட்டு ஊருக்குப் புறப்படுமுன் விடை பெற்றார் கலெக்டர். ஜீப் தயாராக டிராவலர்ஸ் பங்களாவின் முகப்பில் நின்று கொண்டிருந்தது. 'மதுரைக்கு வந்தால் வீட்டுக்கு வா சத்தியம் என்னுடைய யோசனையையும் மனத்தில் வைத்துக் கொள் உன் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு எனக்கு. நடந்ததையெல்லாம் கெட்ட சொப்பனம் போல மறந்துவிடு நான் யோசனை கூறியி விஷயமாக இன்னும் ஒரு வாரத்தில் நானே உனக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதுவேன். அதன் பிறகு உன் முடிவை நீ எனக்கு எழுதினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/592&oldid=595853" இலிருந்து மீள்விக்கப்பட்டது