பக்கம்:பொன் விலங்கு.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 591

போதும்" என்று சத்தியமூர்த்தியிடம் கூறிவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத்திரும்பி, "நீ விவரமாக எல்லாவற்றையும் உன் நண்பனுக்கு விளக்கிச் சொல் குமரப்பன்! நானும் ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கலெக்டர். அந்தக் கலெக்டருக்குச் சத்தியமூர்த்தி இப்போது எவ்வளவோ நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருந்தான். விரிவுரையாளராயிருந்த காலத்திலேயே அவருடைய இலக்கியத் திறனையும், அறிவு நுணுக்கத்தையும் விரும்பி நேசித்தவன் அவன். அரசாங்கப் பிரதிநிதியாக ஒரு பொதுக் காரியத்தில் நியாயம் விசாரிக்க வந்திருந்தாலும் சத்தியமூர்த்தி' என்ற தன் பெயரைக் கேள்விப்பட்டதுமே தன்னைப் பற்றிய விவரங்களை விசாரித்து அந்தப்பெயருக்குடையவன்தம்முடைய பழைய மாணவனாகத்தான் இருக்க வேண்டுமென்று அநுமானமும் செய்துகொண்டு உடனே தன்னைக் கூப்பிட்டனுப்பி மனம் விட்டுப் பேசிய அந்தக்கலெக்டரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். அதையெல்லாம் விடப் பெரிதாக அவன் மனத்தைத் தொட்ட பெருந்தன்மை, ஏதோ வந்தோம்-விசாரித்தோம்-போனோம் என்று முறையைக் கழித்துவிட்டுப் போகாமல், மிகவும் உரிமை பாராட்டி, அவனுடைய எதிர்கால நலனுக்குரிய சிறந்த யோசனை ஒன்றையும் வற்புறுத்திக் கூறிவிட்டுப் போயிருந்தார் அந்தக் கலெக்டர். நண்பன் குமரப்பனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அன்றிரவு முழுவதும் சத்தியமூர்த்தி அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான். r х - -

அவன் தன் எதிர்காலத்தைப் பொருளாக வைத்துச் சிந்திக்கத் தொடங்கியிருந்த இதே இரவில் அவனைப் பொருளாக வைத்துத் தாங்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்த சிந்தனைக்கு முடிவே கிடைக்காமல் ஒரே வீட்டின் ஒரே அறையில் இரண்டு பெண் மனங்களும் தவித்துக் கொண்டிருந்தன. அன்றிரவு படுத்துக் கொள்வதற்கு முன் மோகினியும் பாரதியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஹாலில் வேறு யாரும் இல்லை. அவர்கள் இரண்டு பேரும் மட்டுமே தனியாக இருந்தார்கள். கண்ணாயிரமும், கணக்குப் பிள்ளைக் கிழவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/593&oldid=595854" இலிருந்து மீள்விக்கப்பட்டது