பக்கம்:பொன் விலங்கு.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 605

என்ற நிராசையின் காரணமாகவே முன்னிலும் அதிக அழகோடும், அதிகச் சோபையோடும் தோன்றி அவளை மயக்கின. அந்த மயக்கத்தினால் தன் கண்கள் கலங்குவதையும் அடக்கிக் கொள்ள முடியாமல். "இதை மோகினி அக்கா உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க" என்று சொல்லுருவம் நலிந்து உடைபட்ட வார்த்தைகளால் கூறிவிட்டுக் கையிலிருந்த அந்தக் கடித உறையை அவன் கையில் நேரடியாகக் கொடுக்கவும் துணியாமல் அவனருகே இருந்த மேஜையின்மேல் விளிம்பில் பட்டும் படாமலும் வைப்பதுபோல் தயங்கியபடி வைத்தாள் பாரதி.

'மோகினி அக்கா என்ற பெயரைக் கேட்டதும் சத்திய மூர்த்தியின் முகத்தில் சிரிப்பு மறைந்து இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத ஒர் உணர்வு தெரிவதை எதிரே நின்ற பாரதி கவனித்தாள். ஆனால், அவளாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கடிதத்தை அவன் எடுத்துப் படிக்கத் தொடங்கிய பின்பும் அவள் சிறிது நேரம் நிராசையோடு அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். ஆசைப்பட முடியாத எல்லையில்தான் அதிக ஆசை பெருகுகிறது என்பது அந்தக் கணத்தில் அவளைப் ப்ொறுத்தவரை மெய்யாயிருந்தது. அவன் பார்வை நேர் எதிரே தன்மேல் இருந்திருந்தால் அவளுக்கு அவனை ஏறிட்டுப் பார்க்கும் துணிவே வந்திருக்காது. அவன் குனிந்து கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற காரணத்தால் அவள் நன்றாக அவனைப் பார்க்க முடிந்தது. அவள் உணர்ச்சி வசப்பட்டாள். அழுகை குமுறிக்கொண்டு வந்தது. விசும்பல் ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்த சத்தியமூர்த்தி, "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவள் அழுவதன் காரணத்தைத் தானும் புரிந்து கெர்ண்டே புரியாதது போல் கேட்டபோது பாரதி வேகமாகக் கீழே திரும்பிப் படியிறங்கினாள். "அடேடே.இதென்ன தர்ம சங்கடம்.?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்த சத்தியமூர்த்தி அழுதுகொண்டே விரைந்துவிட்ட அவளைப் பின்தொடரவும் முடியவில்லை. மேலேயிருந்து பலகணி வழியே கீழ்ப்புறம் சாலையைப் பார்த்தபோது அவள் ஏறிக்கொண்டபின் கார் புறப்படுவது மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/607&oldid=595870" இலிருந்து மீள்விக்கப்பட்டது