பக்கம்:பொன் விலங்கு.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 - பொன் விலங்கு

தெரிந்தது. அந்தக் கடிதத்தைப் பாரதியிடம் அப்பாவித்தனமாகக் கொடுத்தனுப்பிய பேதை மோகினியின் மேல்தான் அவனுக்கு அப்போது கோபம் கோபமாக வந்தது. சிறிது நேரத்துக்குப்பின் கல்லூரிக்குப் புறப்பட்டான் அவன்.

அன்று கல்லூரியில் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். முதல் முதலாக அவன் நுழைந்த வகுப்பில் மாணவர்கள் அவனை மாலை சூட்டி வரவேற்றார்கள். மூன்றாவது பாடவேளையில் பாரதியின் வகுப்புக்குச் சென்றபோதுதான் அவளும் அன்று கல்லூரிக்கு வந்திருப்பதை அவன் தெரிந்துகொள்ள நேர்ந்தது. தற்செயலாக அன்று நடத்த வேண்டிய பாடக் கட்டுரையாக வந்து வாய்த்தது குறுந்தொகையில் இலக்கியநயம் என்ற தலைப்பில் இருந்தது. கட்டுரையின் நடுவே சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குஇண்டர்வியூவுக்குவந்திருந்தபோது பூபதியிடம் விளக்கிக் கூறிய 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்ற குறுந்தொகைப் பாடலும் இருந்தது. சத்தியமூர்த்தி அந்தப் பாடலின் பொருளையும் நயங்களையும் இன்றும் மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான். வகுப்பில் அதைக் கேட்கக் கேட்க பாரதியின் முகம் அழுவது போல் சிவந்து கண்கள் கலங்குவதை சத்தியமூர்த்தியும் கவனித்தான். வகுப்பின் நடுவே அவள் குமுறி அழுதுவிட்டால் நன்றாக இருக்காதென்று கருதிய சத்தியமூர்த்தியே மிகவும் சாதுரியமாக ஒரு காரியம் செய்தான்."மிஸ் பாரதீ உங்கள்தந்தையை இழந்தபின்முதல் முதலாக இன்றுதான்கல்லூரிக்குவந்திருக்கிறீர்கள்.ஆனாலும் உங்கள் மனம் இன்னும் முழுமையாக ஆறுதல் அடையவில்லை என்று தெரிகிறது. தயவு செய்து இன்றும் வீட்டிற்குப் போய் ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களைப் பார்த்தால் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறீர்கள்..." என்று சொல்லி அவளுக்கு வகுப்பிலிருந்து வெளியே செல்லத் தானாகவே அநுமதி கொடுத்துவிட்டான். அவளும் தலை குனிந்தபடியே எழுந்து மெளனமாக வெளியே சென்றுவிட்டாள். அவள் எதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று சத்தியமூர்த்திக்குத் தெளிவாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/608&oldid=595871" இலிருந்து மீள்விக்கப்பட்டது