பக்கம்:பொன் விலங்கு.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 பொன் விலங்கு

மயானத்தில் காரியங்கள் எல்லாம் முடிந்து வீடு திரும்பிய போதும் மதுரையிலிருந்து கார் திரும்பவில்லை என்று தெரிந்து சத்தியமூர்த்தியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பாரதி. மோகினியைக் கொண்டு போய்ப் பொசுக்கிவிட்டு வீடு திரும்பியபின் வீட்டுக்குள் நுழைவதற்கே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது அவளுக்கு. ஜமீன்தாரும், கண்ணாயிரமும் அவர்களோடு வழக்கமாகச் சீட்டு விளையாட வரும் இன்னொரு பெரிய மனிதரும் கவலையில்லாமல் முன் ஹாலில் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி ஒன்பதரைக்கு மேல் முன்புறம் போர்டிகோவில் கார் ஹாரன் ஒலி கேட்டு உள்ளே அழுது கொண்டிருந்த பாரதி வெளியே வந்து பார்த்தாள். டிரைவர் முத்தையா மட்டும் காரிலிருந்து இறங்கி வந்தான்.

"அவர் வரலியா, முத்தையா?"

'வந்திருக்காரு ஆனா இங்கே நம்ம வீட்டுக்கு வரச் சங்கடப்படறாரு. அப்படியே வர்ற வழியிலே மயானத்துப் பக்கமாகக் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கிட்டு நீ வீட்டுக்குப் போன்னு சொல்லிக் காரையும் என்னையும் இங்கே அனுப்பிச்சிட்டாரு?" என்றான் முத்தையா.

"வேறு என்ன சொன்னார்?"

"நீங்க முதல்லே மதுரைக்கு அனுப்பிச்ச கடிதாசு அவருக்குக் கிடைக்கலியாம். அதனாலேதான் இவ்வளவு ஆகிவிட்டதுன்னு ரொம்ப வருத்தப்பட்டார். காரிலேயே அழுதுகிட்டுத்தான் வந்தாரு, இப்பக் கொடுத்தனுப்பின கடிதாசையும் அழுதுகிட்டேதான் படிச்சாரு. இத்தினி நாளாநம்ம காலேஜிலே இருந்தாரே? ஸ்டிரைக் வந்தப்போ ஹாஸ்டலுக்குத் தீ வச்சுப்பிட்டாருன்னு பொய்யாப் பழி சுமத்தி அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டுப் போனாங்களே; அப்பக்கூட அவர் கண்கலங்கி நான் பார்க்கலிங்கம்மா. அத்தினி நெஞ்சழுத்தக்காரரு இன்னிக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/680&oldid=595951" இலிருந்து மீள்விக்கப்பட்டது