பக்கம்:பொன் விலங்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பொன் விலங்கு

பற்றியதாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முதலில் கல்லூரி முதல்வர்தான் பேச்சை ஆரம்பித்தார்.

'ஐந்தாறு ஆண்டுகளாவது, 'செர்வீஸ்' உள்ளவராக இருந்தால் தான் ஒருவர் நமக்குப் பயன்படுகிற நல்ல விரிவுரையாளராக அமைய முடியும். இப்போது வந்துவிட்டுப் போகிற இந்த முதியவர் நிறைய ஆண்டுகள் முன் அநுபவம் உள்ளவராக இருக்கிறார், இன்னொரு தகுதி-வயதானவராகவும் இருக்கிறார்..."

"அப்படியெல்லாம் தகுதிகளிருந்தும் இப்போது தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டுவிட்டு அவர் இங்கே எதற்காக வரவேண்டும்" என்றார்.

-சிரித்தபடி இப்படி வினாவிய குரல் தன் தந்தையினுடையதாக இருக்கவே பாரதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் தந்தை இப்படி வினாவியதைப் பாராட்டி இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து 'அப்ளாஸ் கொடுப்பதுபோல் தட்டிவிட இருந்தவள் தான் உட்கார்ந்திருந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் எச்சரிக்கை பெற்று இரண்டு கைகளையும் சேர்த்து ஓசைப்படாமல் பிரித்தாள். பிரின்ஸிபலும் தந்தையுமே விவாதித்தார்கள். ஹெட்கிளார்க் பயபக்தியோடு அடக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பிரின்ஸ்பலின் வலுவற்ற மறுமொழிகளையும் தந்தையின் வலுவான வினாக்களையும் பாரதி மிக அருகிலிருந்து மறைவாகக் கேட்க முடிந்தது.

'ஒரு வேளை நம் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்குச் 'சம்பள ஸ்கேல் அதிகம் என்று வருகிறார் போலிருக்கிறது...?" என்று வார்த்தைகளை இழுத்து இழுத்து நிறுத்தித் தயங்கியபடியே மெல்லச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

'இப்போது அவர் இருக்கிற இடத்தைவிட்டு இங்கே சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வருகிறவராயிருந்தால் நாளைக்கு இதைவிட அதிகமாகச் சம்பளம் கிடைக்கிற ஓர் இடம் தெரிந்தால் இங்கே விட்டுவிட்டு அங்கே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?" -

கல்லூரி முதல்வரால் இந்தக் கேள்விக்கு ஒரு மறுமொழியும் கூற முடியவில்லை. மெளனம் நிலவியது. பின்பு அவள் தந்தைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/90&oldid=595986" இலிருந்து மீள்விக்கப்பட்டது