8 பொய்ம் முகங்கள் ஒருத்தியை மானிட்டராகத் தேர்ந்தெடுத்து அவள் டிரில் மாஸ்டர் அறையிலிருந்து தேவையான விளையாட்டுக் கருவிகளைக் கேட்டு வாங்கிவந்து விளையாட்டு வகுப்பை: எப்படியாவது நடத்திக்கொள்ள வேண்டியது என்று விடப் பட்டிருந்தது. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளாகவே. தலைமையாசிரியர் வாசுதேவன் எம்.ஏ.எல்.டி. இந்த மேல் வகுப்புப் பெண்களின் உடற்பயிற்சி வகுப்புக்களில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியிருந்தார். அதைக் கவனிக்கிற பிறர் அவரைக் கேலி செய்யக்கூடிய அளவு: அவர் அதிக அக்கறை காட்டினார். மாணவிகளுக்கு-அவர் களில் சிலருடைய கைகளைப் பற்றியபடி ரப்பர்ரிங்கை எப்படிப் பிடித்துக் கொள்ளுவது எப்படி வீசுவது என்றெல் லாம்கூடத் தலைமையாசிரியர் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொடுக்கத் தலைப்பட்டார். இந்த விஷயத்தில் மாணவி. கள் கூச்சப்பட்டு விலகி ஓடினால், கூட இவர் அவர்களை விடத்தயாராயில்லை. தம் அறையில், அமர்ந்தும், வகுப்புக். களைச் சுற்றிப் பார்த்து சூபர்வைஸ் செய்தும் ஒரு. தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய வேலைகள் வேறு எவ்வளவோ இருந்தும், பழக்கத்துக்கு அடிமையான ஒரு குடிகாரனைப் போல் மாணவிகள் மைதானத்துக்கு விளை யாட வருகிற நேரத்தில் எந்த வேலை எங்கே இருந்தாலும் , அதை அப்படியே போட்டுவிட்டு மாணவிகளோடு வந்து. மைதானத்தில் சேர்ந்து பல்லிளித்துக்கொண்டு நிற்கிற. பழக்கம் தலைமையாசிரியருக்கு வந்துவிட்டது. இது. சம்பந்தமாக எழுந்த கேலி, கிண்டல் எல்லாம்கூட அவரை ஒன்றும் மாற்றிவிடவில்லை. - ” "ஹெட் மாஸ்டரையா தேடlங்க ரூம்லே இல் லேன்னா ப்ளே கிரவுண்டிலே’ கேர்ள்ஸ் விளையாடற. இடத்திலே போய்ப் பாருங்க. நிச்சயமா அங்கே இருப் பாரு' என்று சிரித்துக்கொண்டே மற்றவர்கள் அவரை பற்றிப் பதில் சொல்கிற எல்லைக்கு அவரது இந்தப் போக்குப் பிரசித்தமாயிருந்தும் அவர் பழையபடியேதான்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/10
Appearance