பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O தமிழாசிரியரான சுதர்சனனுக்கு நேரடியாகவே டெர் மினேஷன் ஆர்டரை அனுப்புவதற்குத் தலைமையாசிரியர் வாசுதேவன் கூடத் தயங்கினார். மறுபடியும் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதற்குப் பதில் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். டெர்மி னேஷன் ஆர்டர்-டைப் செய்த பின்னும் அதை நிறுத்தி வைத்துக் கொண்டு ஜமீன்தாரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார் தலைமையாசிரியர். ஜமீன்தாரோ ஒரே பிடிவாத மாக இருந்தார். . - - சாயங்காலம் மன்றக்குடி மகபதி அடிகளாரோடு ஸ்கூல் இலக்கிய மன்றக்கூட்டத்திற்கு நான் வருவேன். அப்படி வர்ரப்பவே அந்தத் திமிர் பிடிச்ச தமிழ் வாத்தி, யான் என் கண்ணிலே படக்கூடாது. அதுக்குள்ளாரவே அவனை வீட்டுக்கு அனுப்பிடணும்'-என்றார் ஜமீன் தார். அவ்வளவு பெரிய மனிதரை எதிர்த்து வாதிடும் நெஞ்சுரமும் துணிவும் தலைமையாசிரியருக்கு இல்லை. வேலை நீக்க உத்தரவைச் சுதர்சனனிடம் நேரில் கொடுப்பதா, தபாலில் அனுப்புவதா என்பது பற்றி ரைட்ட ருக்கும் தலைமையாசிரியருக்கும் சிறிது நேரம் ஒரு சர்ச்சை நிகழ்ந்தது. டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு நேரிலேயே கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்ட பின் தலைமையாசிரியர் அறைக்குச் சுதர்சனனை வரச் சொல்லிக் கொடுப்பதா அல்லது பியூனி டம் கொடுத்தனுப்புவதா என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அவர்களுடைய தயக்கங்களும், பயங்களும் அவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியத்தின் நியாயமின்மையையே நிரு பித்துக் கொண்டிருந்தன. மனச்சாட்சிக்கு விரோதமாகவே அதை அவர்கள் செய்தார்கள். - - பள்ளி வகுப்பில் படிக்கிற பெண்களுக்கு அவர்களுடைய தமிழ்ப் பாடப்புத்தகங்களிலும், கட்டுரை நோட்டுக்களிலும்