பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பொய்ம் முகங்கள் வரின் உருவப் படம் ஒட்டப்பட்ட பாட்ஜ் அட்டைகளைக் குண்டுசியால் குத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளிச் சிறுவர் கள் கூட்டம் ஒன்று காச்மூச்சென்று இரைந்து கொண் டிருந்தது. . தலைவரின் வீட்டுக்கு எதிரே சுவர்களில் பெரிய பெரிய தலைவர் படங்களோடு கூடிய சுவரொட்டிகள் அவரைப் பல்லாண்டு வாழ்த்தின. தலைவரின் கண்களில் வீட்டுக்குள் வரும்போதும், வீட்டிலிருந்து அவர் வெளியே போகும் போதும் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே அவற்றைத் தொண்டர்கள் அங்கு. ஒட்டியிருப்பதாகத் தோன்றியது. - s: "தலைவர் கையாலே ஏழை எளியவர்களுக்குச் t சர்க்கரைப் பொங்கல் வழங்கறதுன்னு இந்த வருஷம் புதுசா ஒண்ணைச் சேர்த்தேன். அதான் வாசல்லே இத்தினி பசங்க கூட்டம்' என்றான் ரகு, கூட்டம் சேர்க்கவே அந்த ஏற்பாட்டைச் செய்ததுபோல அவன். சொன்னதைச் சுதர்சனனும் கவனித்தான். அவர்களின் நடுவே தண்ணிரிலிருந்து கரையில் எடுத்துப் போட்ட மீன் மாதிரித் தவித்தான் சுதர்சனன். ரயிலிலிருந்து இறங்கி யதும் இறங்காததுமாக இதில் ஏன் வந்து சிக்கிக் கொண் டோம் என்று தோன்றியது அவனுக்கு. சென்னை நகரம் முழுவதும் சிலர் வேறு வேலையே இல்லாமல் மாலை போட்டுச் சுவரொட்டி அடித்து விளம்பரப்படுத்தி எப் போதும் யாரையாவது காரணத்தோடோ காரண மின்றியோ எதற்காகவாவது கொண்டாடிக் கொண்டே இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இவர்களுக்கு இதைத் தவிர உழைக்க வேறு வேலையே கிடையாதோ என்றும் எரிச்சலாயிருந்தது. "இனவழிப் பிரிந்து மொழிவழிக் கூடிக் கொள்கைவழி இணைந்து தனிப்பெரும் தலைவர் காட்டும் புது வழியில் நடப்போம்' என்று மொத்தை மொத்தையாக அர்த்தம் புரியாமல் ஏதேதோ சுவர்களில் அச்சிட்டு ஒட்டியிருந்தார்