பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 141 விடுமுறை என்பதாகவும் விரும்புகிற மாணவ மாணவிகள் தலைவர் இல்லத்துக்கு மாலைசூட்ட வரலாம் என்பதாக வம் முகப்பில் ஒரு போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. தலைவர்மேலுள்ள பற்றின் சரியல் கலம்பகம் டுட்டோரி வல்ஸ்' என்ற பெயரிலும் போர்டில் எழுதி வைக்கப்பட் டிருந்த அறிவிப்பிலும் இருந்து தெளிவாகத் தெரிந்தது. அப்போது மாடியில் தனியாகச் சுதர்சனன் மட்டுமே இருந்தான். கீழ்ப் பகுதியில் டுட்டோரியல் காலேஜின் அட்டெண்டர் என்ற பெயரில் வேலை பார்த்த ஓர் ஊழியன் முகப்பில் காவலுக்கு உட்கார்ந்திருந்தான். இரயிலில் சரியாக உறங்காத அலுப்பிருந்தும் இப்போது .சுதர்சனனுக்கு உறக்கமும் வரவில்லை. விழித்திருப்பதும் சிரமமாக இருந்தது. அறையில் இரண்டு மூன்று காலைத் தினசரிகள் வந்து விழுந்து கிடந்தன. அவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கியதும் கண்களில் தூக்கம் சொருகிக் கொண்டு வந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே கண் கள் தாமாக மூடின. தினசரி கையிலிருந்து இயல்பாகக் கீழே நழுவியது. - - . . யாரோ திறந்திருந்த கதவிலேயே தான் வந்திருப்பதை அறிவிக்கும் நோக்குடன் விரல்களால் மெதுவாகத் தட்டும் ஓசை கேட்டது. தட்டும் ஓசையைவிட நளினமாகக் கையின் வளையொலி முந்திக் கொண்டு ஒலிக்கவே.சுதர்சனன் கண் விழித்து எதிரே ஒரு பெண் நிற்பதைப் பார்த்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான். சிவந்த அழகிய நெற்றியில் செங்கோடாக இழுத்த திலகம் விளங்கச் சிரித்த வாறே ஒரு பெண் வாயிற்படி அருகே நின்று கொண்டிருந் தாள். -- . . . "ரகுமாமா இல்லியா? நான் மெஸ்ஸிலே இருந்து வரேன். அவர் காலையிலே டிஃபனுக்கும் வரலே. மத்தியானம் பகல் சாப்பாட்டுக்காவது வருவாரான்னு தெரியனும்.' . . . . . . . . . .