14 பொய்ம் முகங்கள் பக்கத்து வகுப்பறையில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாச ராவ் மாணவர்களுக்கு ஏதோ ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு அவர்கள், அதைச் செய்கிற நேரத்தில் உலாவுவதற்கு வராத்தாப் பக்கம் வந்தவர். . - • - "என்ன? சுதர்சனம் சாருக்கு ஒசிப் பீரியடா?-என்று. சுதர்சனன் அமர்ந்திருந்த வகுப்பறை ஜன்னலருகே நின்று: சிரித்தபடி கேட்டார். சுதர்சனனும் எழுதுவதை நிறுத்தி விட்டு எழுந்து ஜன்னலருகே சென்றான். ராவிட்ம் விவரம் தெரிவித்தான். அவர் சொன்னார்: . "கேர்ள்ஸுக்கு டிரில் பீரியடு இருந்தா ஹெச்.எம். கிளாஸுக்கு வரமாட்டார்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே?" 3. - 铨 "அப்படின்னா, டயம் டேபிளில் கேர்ள்ஸுக்கான டிரில் பீரியடை அவரே போட்டு எடுத்துக்கலாமே? ஏன் மத்தவங்க கழுத்தை அறுக்கிறாரு' 'கோபப்படாதீங்க? இப்பத்தான் வேலையிலே சேர்ந். திருக்கீங்க?... கொஞ்சம் பொறுத்துப் போங்க...” என்று. சுதர்சனனுக்கு அறிவுரை கூறினார் புவிக்குட்டி. சீனிவாச ர்ாவுக்கு அந்தப் பள்ளிக்கடத்திலே எப்படியோ புலிக்குட்டி என்ற பெயர் அவரது சொந்தப் பெயரே மறைகிற அளவு நிலைத்துவிட்டது. t - . டேய் ஹோம் ஒர்க் போடாமே வராதே! புலிக் குட்டி கிளாஸ்லே நாற்பத்தஞ்சு நிமிஷமும் பெஞ்சு மேலே: ஏறி நிற்க வேண்டியிருக்கும்'-என்று பையன்களே ஒருவருக்கொருவர் குறிப்பிட்டுப் பேசிக்கொள்ளும் அளவு கணித ஆசிரியருக்குப் பட்டப் பெயர் பிரபலமாயிருந்தது. கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாசராவ் போன்று பல ஆண்டுகள் அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து இருப்பவர் - கள் கூடத் தலைம்ை ஆசிரியர் வாசுதேவனுக்கு ஒரளவு அடங்கியும், பயந்தும், நடந்ததைப் பார்த்துச் சுதர்சன்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/16
Appearance