உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொய்ம் முகங்கள் சுக் குதிரை ஏற ஆசைப்படறாங்க. பயத்தை ஒழிக்கணும். முதல்லே ஒரு அறிவாளி நிர்ப்பயமானவனாகவும் சுய மரியாதை உள்ளவனாகவும் இருக்கக் கத்துக்கணும். அந்த ரெண்டையும் கத்துக்காமே மத்த ஆயிரம் விஷயத்தைக் கத்துக்கிட்டிருந்தாலும் அவனை அறிவாளியா மதிச்சு லட்சியம் பண்ணக் கூடாது. கோழைத்தனத்தையும் அறி வையும் கலக்கிறது மயிரையும் கீரையையும் கலந்துவைக்கிற மாதிரி. -. 'வயித்துக் கவலைவந்து நடுத்தெருவிலே அனாதையா நின்னுடுவோமோன்னு பயம் வர்ரப்ப மத்தப்ப்யமும் தானா வந்துடுதுங்களே?" - - . 'நியாயமான அறிவாளியா இருந்து துணிச்சலையும் சுயமரியாதையையும் காப்பாத்திக்க முடியலேன்னா அப் புற்ம் தெருவிலே கைவண்டி இழுத்தாவது-மூட்டை தூக்கி யாவது நியாயத்தையும் சுயமரியாதையும் காப்பாத்திக் கொள்ள வேண்டியதுதான். நம்மிலே பல பேர் சோறா தன்மானமா? என்கிற கேள்வி வருகிற போது நமக்கு இப் போது சோறு போதும் தன்மானம் வயிற்றை நிரப்பாது. சோறுதான் வயிற்றை நிரப்பும் என்பது நம்முடைய கணிப் பாக இருந்துவிடுகிறது. - - - "பிழைக்கத் தெரியாதவன்னு நாலுபேர் கேலி பண்ணு வாங்களே சார்?' நாலுபேர் சொல்றதுக்கெல்லாம் தயங்கினா அப்புறம் தயங்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். கட்டுத்தறியிலே கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்துவிட்ட பிறகும் முன்பு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி தான் இன்னும் கட்டப் பட்டிருப்பதாகவே நினைத்து நின்றுகொண்டு இருப்பது போல நாமும் தயங்கி நின்றுகொண்டிருக்கக் கூடாது. அர்த்த மில்லாத கூச்சமும், நாணமும், தயக்கமும் உள்ள சமூகத்தில் எந்த நல்ல மாறுதலும் உடனே நிகழாது.'