நா. பார்த்தசாரதி 19 "இப்ப நோட்ஸ் ஆஃப் லெஸ்ன் எழுதாட்டி என்ன குடிமுழுகிப் போகுது? என்னமோ மனுஷன் கருக்கட்றான் ...' என்று அடுத்த நிமிஷமே பிச்சாண்டியா பிள்ளையும் அவனோடு சேர்ந்து கொண்டார். மணி அடிக்கவே அவன் மறுபடியும் வகுப்புக்குப் புறப் பட்டுப் போனான். - - - - முன் வரிசையில் பார்க்க லட்சணமாக நாலைந்து இளம் பெண்களையும், லட்சுமீகரமான சில முகங்களையும் பார்த்தவுடன் சிறிது உற்சாகம் மூண்டது. நளவெண்பாவில் நளன் தமயந்தி துதுப் பரிமாற்றம் பற்றிய பாடம். பாடத் தைத் தொடங்கிய போதே சிறிது நகைச்சுவையாக ஏதோ அவன் சொல்லவே வகுப்பு முழுதும் கலீர் கலீரென்று சிரித்து ஓய்ந்தது. இப்படி இரண்டு மூன்று சிரிப்பலைகள் எழவும் வகுப்பின் வராந்தாவில் தலைமையாசிரியர் சூபர் விஷனுக்கு வரவும் சரியாக இருந்தது. - w சுதர்சனனின் வகுப்பில் சிரிப்பலைகளைக் கேட்டுவிட்டு அவர் தயங்கி நின்றார். வகுப்பின் வாசற்படியில் தலைமை அயாசிரியர் வந்து தயங்கி நிற்கவே வகுப்புக்குள் மாணவர் களும் மாணவிகளும் அவருக்காகவே எழுந்து நின்றுவிட்ட னர். சுதர்சனனும் எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. அவர் அவனைக் கைநீட்டிக் கூப்பிட்டார். "மிஸ்டர் சுதர்சனம்: ஒரு நிமிஷம் இப்படி வாங்கோ.' அவன் போனான். நடுவே வந்து வகுப்பை அவர் தடுத் .ததில் அவனுக்கு உள்ளுற எரிச்சல் மூண்டிருந்தத. வெளே ரென்று வெளுத்திருந்த ஆதர்சபுரம் ஆற்றுச் சலவை உடை யில் மின்னல் எழுந்து நடப்பதுபோல் தோன்றினான். சுதர்சனன். எதிரே போய் நின்றபோது தலைம்ையாசிரியர் அவனுடைய மார்பளவு உயரத்துக்கு மட்டுமே இருந்ததால் அவர் அவனை நிமிர்ந்துதான் பார்க்க முடிந்தது. அவர் குரலைத் தணித்துக் கொண்டு அவனிடம் மறுபடி கூறின்ார்:
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/21
Appearance