நா. பார்த்தசாரதி 213 அறிமுகப்படுத்திக்கொண்டீர்கள். இருந்தும் இவை எல்லாம் உங்களுக்குப் புரியாதது வியப்புக்குரியது'- - "நான் படிச்ச தமிழிலே இதெல்லாம் இல்லியே...? புதுசாப் பலபேர் பலவிதமா இப்பல்லாம் அவிச்சுக் கொட்ற வார்த்தைங்க ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமா எல்லாம் தமிழிலேயே இயலவேண்டும்:- - . நல்லதுங்க...உங்க பேர்லே தாசன்னு எப்பிடி வரவிட் டீங்க?' , - "ஏன்? அதிலென்ன பிழை?" "அது தமிழ் வார்த்தை இல்லியே? தெரியாதா உங்க ளுக்கு?’’ - - い யார் சொன்னார்கள்? அது சாலவும் தமிழ் வார்த் தையே’’-சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. எம்.ஏ. முதல் வகுப்பில் தேறிவிட்டு பி.எச்.டி-க்கு ஆராய்ச்சி செய்யும். ஒருத்தருக்கு எது தமிழ் வார்த்தை எது தமிழ் வார்த்தையில்லை என்பது கூடச் சரியாகத் தெரிய வில்லையே என்பது வேடிக்கையாயிருந்ததுடன் தாங்க முடியாத வேதனையையும் அளித்தது. - 'ஒரு மொழி தமிழா, தமிழில்லையான்னு கண்டு பிடிக்கத் தமிழ் மட்டுமாவது நல்லாத் தெரிஞ்சிருக்கணும். அல்லது வேறே சில மொழிகளும் கொஞ்சமாவது கூடத் தெரிஞ்சிருக்கணும். இரண்டுமே சரியாத் தெரியாமே...?" - சுதர்சனன் கூறியது ஆறை அண்ணாதாசனுக்கு எரிச்சல் ஊட்டியதுபோலும். அவனே, பேச்சை உடனே முடித்து விட்டான்; "நீங்கள் இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். முதலில் உங்கள் பொருள்களை நிரல்பட வைத்துக் கொண்டு அறையில் அமைக. பின்பு நாம் ஒய்வாக உரையாடலாம்" -என்று அவனிடமிருந்து சுதர்சனனுக்குப் பதில் வந்தது. நம்ம் ரும் மேட்-அதான் இந்த மெடிகல் ரெப்ர ஸண்டிடிவ் ஊர்லே இல்லீங்களா?" - பொ-14 - . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/215
Appearance