நா. பார்த்தசாரதி 21 7
- மனிதர்களைப் பற்றி அவ்வப்போது இப்படிச் சந்தேகப்
படுவதுதான் அவன் வழக்கம். - - மூன்று பேரும் மூன்று வேறு துருவங்களாக இருக்கும். நிலையில் ஒரே அறையில் சேர்ந்து வசிப்பது எப்படி என்று மலைத்தான் ஆறை அண்ணாதாசன். அதே சமயத்தில் சுத்ர்சனன் வேறு விதமாக நினைத்தான். மாறுபாடும். வேறு பாடும் உள்ளவர்களுக்கு நடுவே கலகலப்பாக உயிரோட்டத் தோடு வாழ முடியுமென்று சுதர்சனனுக்குத் தோன்றியது. அந்த மெடிகல் ரெப்ரஸண்டிடிவ்வின் படுக்கைக்குமேல் சிறிதாக முருகர், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றில் சூட்டப்பட்டிருந்த பூச் சரங்கள் வாடிச் சருகாகி இருந்தன. படங்களில் குங்குமமும் சந்தனமும் குழம்பிய பொட்டுக்கள் இடப்பட்டு ஊதுபத்தி சொருகிச் சொருகிக் கருகிய கரிக்கோடுகளும், புகை மங்க லும் படிந்திருந்தன. ஆறை அண்ணாதாசனின் படுக்கைக்கு மேலே அவன் :யாருக்குத் தாசனோ அவர் படமும், அதேபோல் தலைவர் கள் வேறு சிலருடைய படமும் மாட்டப்பட்டு அவற்றிலும் சூட்டப்பட்டிருந்த பூச்சரங்கள் வாடியிருந்தன. - - "என்ன? பார்க்கிறீர்கள்? உங்கள் கட்டிலுக்கு மேலே நீங்கள் விரும்பும் படத்தை மாட்டிக் கொள்ளலாம். அதற்கு இடம் இருக்கிறது." . . . . . . அவசியமில்லை. தீப்பெட்டிப் படம் சேர்க்கும் குழந்தை வயசிலேருந்து மாறி வளர்ந்து நான் வெகு தூரம் நடந்து வந்து முதிர்ந்து விட்டேன். இனிமேல் நான் படங் கள் வாங்கிச் சுவரில் மாட்டி மாலை போட்டு மகிழறதுங் கிறது முடியாத காரியம்." "அப்படியானால் நான் சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறேன் என்கிறீர்களா? இதற்கு என்னதான் பொருள்?"