உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 219. "நீங்கள் பையன்களுக்குச் சில்லறை கொடுக்காவிட். டால் அவசர ஆத்திர நேரங்களில் கூட உங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள். ஏனென்று கேட்காமல் கைவிட்டு விடுவார்கள்." * . - . "பரவாயில்லை தம்பீ! நான்சமாளித்துக்கொள்வேன். எனக்கு எடுபிடி ஆள் யாரும் அவசியமில்லை. "தெருக்கோடியில் முனியாண்டி உணவுவிடுதி உள்ளது. -இப்பால் உடுப்பி உணவகமும் உண்டு. கடற்கரை' செல்லும் வழியில் முரளி உணவகமும் இருக்கிறது. திருவல்லிக்கேணியில் உணவகங்களுக்கு ஒன்றும் குறை வில்லை..." - - - . "இங்கே எனக்கு எல்லா இடமும் நல்லாத் தெரியும். நானே பக்கத்திலே பெல்ஸ் ரோடிலேதான் இதுவரை இருந் தேன். ஊருக்குப் புதுசு இல்லே! என்னைப்பத்தி நீங்க அதிகம் கவலைப்பட வேண்டாம். திருவல்லிக்கேணி ன்னக்குப் பழகின எடம்தான்.' - - . . . . " 'அவ்வாறாயின் நன்று! நீங்களே யாவும் நன்கு அறி. வீர்கள்." . - ; : இப்படிப் புத்தகம் வாய்திறந்து பேசுவதுபோல் தொடர்ந்து உயிரோட்டமில்லாமல் அவனால் எவ்வாறு முனைமுறியாமல் பேச முடிகிறதென்று சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிரிண்டிங் மிஷின் அச்சடிப்பதை மறந்துதானே திடீர்ென்று தன்மேல்சார்த்தப்பட்டிருப்பதை எல்லாம் அப்படியே வாய் திறந்து கக்கிவிட்டுப் பேசினால், எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவன் பேச்சு, சிறிது நேரத்தில் ஆறை அண்ணாதாசன் அவனைத் தேடிவந்த யாரோ ஒர் இளைஞனுடன் புறப்பட்டு வெளியே போய், விட்டான். எதிர் அறையிலிருந்து பாகவதர் மாதிரித் தலையலங்காரத்துடன் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார். யாரு? என்ன வேனும்?' - - - - •. "ஒண்னுமில்லே! நீங்க இந்த ரூமுக்குப் புதுசா வந்: திருக்கிங்க போல்ருக்கு. என் பேர் மதன்குமார். தொழில்