2感2 . பொய்ம் முகங்கள் இந்தப் புறாக் கூண்டிலிருந்து விடுதலையாகிக் கொஞ்சம் பெரிய புறாக் கண்டுக்குப் போகமுடியும். ஒண்டுக் குடித்தன. வாசமும் ஒரு புறாக்கூண்டுதானே? வெகுசிலர் இந்த முதற். புறாக் கூண்டிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுகிற அளவு இங்கேயே விரக்தியடைந்து விடுவதும் தேங்கி விடுவதும் உண்டென்று நிதரிசனமாகத் தெரிந்தது. எதிலும் நிலைக்கமுடியாமல் யாரோடும் ஒட்டிக் கொள்ள முடியாமல் தானே விரக்தியடைந்துவிட்டோமோ என்று கூட அவனுக்கு ஒரு கணம் தோன்றியது. எதிர்நீச்சல் போடுகிறவனுக்கு வாழ்க்கை ஒருபோதும் அலுப்பதில்லை. ஆற்றோடு போகிறவனுக்குத்தான் சொந்தக் கை கால்களை அசைக்கவும் அவசியமில்லாமல் நீர்ப் போக்கின் சக்தியே இழுத்துச் சென்றுவிடுகிறது. எதிர்நீச்சல்காரன் அப்படி இல்லை. ஒவ்வொரு விநாடியும் எதிர்த்து ஊடறுத்துக் கவனமாக முன்னேறவேண்டிய அவசியம் அவனுக்கு உண்டு. ஒரு சில வேளைகளில் யார் எதிர்நீச்சலிடுகிறானோ அவனுக்கே தான் செய்வது சரியானதுதானா என்று தோன்றலாம். ஆனால் அடுத்த கணமே அந்த அலுப்பு மறைந்துவிடும். பள்ளிக்கூட வேலையை விட்டு விட்டுச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தது, ரகுவின் தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்கு அண்டியது, அதிலும் ஒட்டாமல் வெளியேறியது எல்லாம் எதிர்நீச்சலாகவே தோன்றின. என்ன சார்: பேசிக்கிட்டிருக்கறப்பவே கபால்னு. நீங்களா உங்களுக்குள்ளாரவே சிந்தனையிலே மூழ்கிட் & உங்க.." மதன்குமார் கேட்டான். * , "ஒண்னுமில்லே! நாடகம் எழுதணும்னிங்களே: அதைப் பத்தித்தான் யோசிச்சேன். உங்களுக்கு நாடகம் எழுதறதுக்கு என்னையும் விடப் பொருத்தமான ஆள் இங்கேயே இருக்காருங்கறதை நீங்க மறந்துட்டாப்பல. இருக்கே?...' * - " - யாரு அது? எனக்கொண்னும் புரியலியே நீங்க சொல்றது?" * . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/224
Appearance