உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 229 "இண்டர்வ்யூ லெட்டர் வரும், வந்தாப் புறப்பட்டு வாங்க, இந்த சர்டிபிகேட்ஸ் ஒரிஜனல் எல்லாம் இப்ப எங்களுக்குத் தேவை இல்லை. நீங்களே கொண்டு போக லாம். அவசியமானால் இன்ட்ர்வ்யூவுக்குப் புறப்பட்டு வர்ரப்பக் கொண்டு வாங்க போதும்' என்று சர்டிபிகேட்டு களை தனியே பிரித்து அவனிடமே திருப்பி நீட்டினார் தலைமையாசிரியர். அநேகமாக அந்தக் கட்டிட்த்தைப் பொறுத்தவரை பூரீ சென்னிமலை முருகன் துணை வெளி யாருக்குக் கிடைக்காது போலிருந்தது. சுதர்சனன் வெளி. யேறியபோது மறுபடி டேவிட் கந்தையா வேறொரு நரைத்த மீசைக்காரருடன் எதிர் கொண்டார். "இவர் தாங்க இங்கே சீனியர் தமிழ்ப் பண்டிட். புலவர் பூங்காவனம்.' "வணக்கம்.டேவிட் இப்பத்தான் நீங்க வந்திருக் கிறதைப் பத்திச் சொன்னாருங்க.ரொம்ப மகிழ்ச்சி..." மகிழ்ச்சிப் படறாப்ல இன்னும் எதுவும் நடந்து ட்லே. சும்மா அப்ளிகேஷனைக் குடுத்திருக்கேன் அவ்வளவுதான். சென்னிமலை முருகன் நமக்கும் துணையா இல்லையாங் கிறது. இனிமேல்தான் தெரியனும்" என்று சிரித்துகி கொண்டே புலவருக்கு மறுமொழி கூறினான் சுதர்சனன். "இதுக்கு முன்னாடி எங்கே இருந்தீங்க? சர்வீசிக்க்ே புதுசா அல்லது எங்கேயாவது ஏற்கெனவே தமிழாசிரியரா இருந்திருக்கீங்களா?' - ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல்லே தமிழாசிரி யரா இருந்தேன். அப்புறம் இங்கேயே ஒரு டுட்டோரியல், காலேஜ் ல கொஞ்ச நாள் இருந்தேன்.' டுட்டோரியல் காலேஜ் சர்வீளை எல்லாம்.இங்கே கவுண்ட் பண்ண மாட்டாங்க...ஜமீன்தார் ஹைஸ்கூல்லே எத்தினி வருசம் இருந்தீங்களோ?' - பொ-15