உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39° தடித்துப் பலர் முன்னிலையில் சண்டை வந்து இரசாபாச அம்ாகி விடுமோ என்ற பயமும் தயக்கமும் ரைட்டருக்கு இருந்தன. ஒரு வேளை சுதர்சனன் அன்றைக்கு அந்த மாலை வேளைக்குள் தலைமை ஆசிரியரைச் சந்திக்க வழி யின்றித் தட்டிக் கழித்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட் டால் ஒரு சண்டையைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் எண்ணினார். காலையில் பள்ளி வரும்போது சுதர்சன லுக்கே கோபம் தணிந்து போய்விடலாம் அல்லது மறந்து போய்விடலாம், இப்படி ரைட்டர் எண்ணியதற்கு காரணம் முழுக்க முழுக்கத் தலைமையாசிரியரைப் பற்றிய அக்கறை மட்டுமில்லை. சுதர்சனன் மேலும் ரைட்டருக்கு, ஒரளவு அபிமானம் இருந்தது. புதிதாக வேலைக்கு வந்திருக் கிற ஒளிவு , மறைவில்லாத நேர்மையான ஒர் இளம் தமிழாசிரியர் என்று சுதர்சனனைப் பற்றி நினைத்தார் ரைட்டர். சுதர்சனன் பெயருக்கு வரும் கடிதங்கள். தபால்களைத் தலைமையாசிரியர் பிரித்துப் படித்தபின் அனுப்புவதோ, அதனால் கோபமுற்றுத்தான் அவன் தலைமையாசிரியரைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது. இரண்டு பேருக்கும் ஏதோ தீவிர ழான மனஸ்தாபம் இருக்கிறது என்றும் அந்த மனஸ்தாபம் முற்றித்தான் அவன் ஆத்திரமாக அங்கு வந்திருக்கிறான் என்பதும் மட்டுமே அவருக்குப் புரிந்திருந்தன. - "இப்ப என்ன அவசரம்: நாளைக்குத்தான் பாருங் களேன். ஹெச்.எம். காலையிலே சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்திடுவாரு விடிகாலையிலே அத்தினி கூட்டமும் இருக் காது' என்றார் ரைட்டர். - பரவாயில்லே சார்! எவ்வளவு நேரமானாலும் நான் இன்னிக்கே இருந்து பார்த்துட்டுப் போயிடறேன், ! "நிற்கிறீங்களே! இங்கே உட்கார வேற வழியும் இல்லே. நீங்க நிற்கிறதைப் பார்த்தா எனக்கு மனசு கேட்கலே...' - - . . ."