உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 45 செய்ய அவன் விரும்பவில்லை. ஆனால் அவரோ அப்படித் தான் செய்வான் என்று எதிர்பார்ப்பதாகத் தோன்றியது. அவனைப் பற்றி அவர் ஒருதலைப்பட்சமாக முடிவு செய் திருந்தார். அவனுடைய இதயத்தை அவனுடைய தெளி வான கொள்கைகளை அவனுட்ைய வெளிப்படையான நல்லெண்ணங்களை எதையுமே தலைமையாசிரியர் .லட்சியம் செய்யத் தயாராயில்லை. மென்மையான பண்பு கள் உள்ள அவனை அவர் கொடிய முரடனாகக் கருதினார். அவரை அவன் மதித் தான். அவன்ை அவர் மதிக்கவில்லை. சுய மரியாதை என்ற வார்த்தையையே அவர் தவறாகவும் புரிந்து கொண்டிருந்தார். புலி கரடி சிங்கம்போல் அவனைக் கண்டு மிரண்ட அவர் போலியாக வெளிக்கு அவனை மிரட்டுவது போலவும் நடித்தார். ஒவ்வோர் அதிகாரத்திற்குப் பின்னாலும் ஒரு பெரிய அச்சம் இருக் கும். ஒவ்வோர் மிரட்டிலுக்குப் பின்னாலும் அதைச் செய்பவன் மிரண்டு போயிருப்பது புரியும். தலைமையாசிரியர் வ்ாசுதேவன் எதனாலோ எதற்காகவோ தன்னிடம் மிரண்டு போயிருப்பதன் காரணமாகவே தன்னை மிரட்டுவது போல நடந்து கொள்கிறார் என்பதைச் சுதர்சனன் சுலபமாக உணர்ந்தான். . அவருடைய "காம்ப்ளெக்ஸ்' அவனுக்குப் புரிந்தது. மிரட்டுகிறவர்கள் எல்லாம் உள்ளுற மிரண்டவர்கள். அதி காரம் செய்கிறவர் எல்லாம் உள்ளுற அடிமைப்பட்டவர் கள். பயமுறுத்துகிறவர்கள் எல்லாம் உள்ளுறப் பயந்த வர்கள். பிறரை அடக்கியாள விரும்புகிறவர்கள் எல்லாம் உள்ளுற எதற்கோ அடங்கி ஒடுங்கிப் போனவர்கள்' என்ற தத்துவம் வாசுதேவனுக்கு முற்றிலும் சரியாகவே இருக்கும் என்று தோன்றியது. பல அநுமானங்களை யும் நிகழ்ச்சி களையும் அளவுகோலாக வைத்துப் பார்த்தபோது ёunrэ? தேவன் அந்த அளவுகோலில் அடங்குவார் என்பது நிதர் சண்மாயிற்று. ஒருவிதமாகச் சுதர்சனன் அவரைக் கண்டு பிடித்து முடித்திருந்தான். - -