பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 59 வர்களிலே யாராக இருந்தாலும் அவர்களை இப்படி ஆட்களாக நினைப்பதும்தான் இங்கே வழக்கமாக்கப்பம் டிருக்கிறது.' . . . "இந்த ஆள் ஜமீன்தாரோட நிலத்திலே அறுவடை நடக்க விடாமே கிஸான்களைத் தூண்டி விட்டிருக்கிறான்: இவனை உள்ளே விட்டால் ஜமீன்தாருக்கே கோபம் வரும்." எங்கோ ஓரிடத்தில் நியாயம்கேட்டதற்காக ஒருவருக் குப் பிறிதோரிடத்தில் அநியாயம் இழைக்க வேண்டிய அவசியமில்லை.” "சரி சரி! இதை உம்மிடம் பேசி முடிவு சட்ட இயலாது. எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்படி நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்..." -என்று காட்டமாகச் சொல்லிவிட்டுத் தலைமை யாசிரியர் போய்விட்டார். பொதுவாகப் பழைய இயக்க நண்பர்கள், தோழர்களிடமிருந்து அவன் விலகி இருந்தான். திருமணத்துக்குத் தலைமை, புதுமனை புகுதலுக்குத் தலைமை, குழந்தைகள் காதணி விழா இதற்கெல்லாம் போவதைக் கூடக் குறைத்திருந்தான். பன்னீர் செல்வத்தைத் தலைமையாசிரியர் பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட கோபம் பன்னீர்செல்வத் தின் மேல், அதுதாபமாக மாறி அவன் எந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டானோ அதற்கு உட்னே அவனை ஒப்புக் கொள்ளும்படி செய்திருந்தது. - பன்னீர்செல்வம் உடனே போய்ச் சீர்திருத்த மன்றத் தின் சார்பில் புரட்சிகரமான கலப்புத் திருமணம்-புலவர் சுதர்சனனார் தலைமை ஏற்கிறார்' என்று அழைப்பிதழ் அச்சிட்டு ஊரெல்லாம் அனுப்பிவிட்டான். சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் இவற்றில் எல்ல்ாம் சுதர்சனனுக்கு இருந்த கடந்த கால ஈடுபாடு பெரியது. பின்னால் அவற்றைப் ப்ற்றியும் ஒரு சுய விமர்சனம் ஏற் பட்டது. சீர்திருத்த நோக்கம் உண்மையாகவே இல்லாமல் விளம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் செய்யப்படுகிற