பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பொய்ம் முகங்கள் வில்லை. 'உலகத்திலே பிறந்திருக்கிற எல்லாருக்கும், ஏதாச்சும் ஒரு சாதி குலம் கோத்திரம் இருக்கும். அது அவங்க தப்பு இல்லே அவங்க முன்னோர்கள் தப்பு. மனுஷன் நல்லவனா கெட்டவனா, யோக்கியவனா - அயோக்கியனான்னு பாருங்க. ஒழுக்கமுள்ளவனா இல்லை - யான்னு பாருங்க. சாதியைச் சொல்லி யாரையும் திட்டா தீங்க. நானே ஒரு காலத்திலே அப்படியெல்லாம் திட்டி யிருக்கேன். இப்போ அது தப்புன்னு தெரியுது. நீங்களும் அந்தத் தப்பைச் செய்துடாதீங்க- என்று சுதர்சனன் தன்னிடம் தலைமையாசிரியரைப் பற்றிப் பேசியவர்களிடம் கண்டித்து அனுப்பியிருந்தான். ஒரு நாத்திகன் ஆத்திகனை விட நேரானவனாகவும் இருக்க முடியும் என்பதை நிருபித் துக் கொண்டிருந்தான் சுதர்சனன். ஆனால் தலைமையாசிரி யரோ அதற்கு நேர்மாறாக இயங்கி அவனைப் பற்றியே துஷ்பிரசாரம் செய்து கொண்டிருந்தார். முதலில் இது சுதர்சனனுக்குத் தெரியாது என்றாலும் நாளடைவில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீநிவாசராவ் மூலம் சில விஷயங்கள் அவனுக்குத் தெரியத் தொடங்கின. *. ஒருநாள் ஸ்டாஃப் ரூமில் புலிக்குட்டி சீநிவாசராவுக்கும் சுதர்சனனுக்கும் சேர்ந்தாற் போல் ஒய்வுநேரம் வந்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்க நேர்ந்தது. அப் போது புலிக்குட்டி மெதுவாக ஆரம்பித்தார். ra நீங்ககொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் பண்டிட் சார்! ஹெச்.எம். உமக்குக் குழி பறிக்க ஆரம்பிச்சாச்சு...' - 'நான் ஒண்ணும் தப்பா நடந்துக்கலையே, ஸ்கூலுக்கு லேட்டா வர்ரது கிடையாது. பாடங்களில் எதையும் குறை வைக்க்லே..... 3 or x * என்னமோ நீர் வந்த நாளிலே இருந்து உம்மைக் கண் டால் அவருக்கு ஆகலே-' - . . . . நமக்குக் காரணம் புரியாமலும் தெரியாமலும் நம்ம மேலே ஒருத்த்ருக்கு ஏற்படற வெறுப்புக்கு நாம் என்ன செய்ய முடியும் சார்?' - - -