பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 77. ஆனாலும் உம்மை ஹெச். எம். ஒண்னும் பண்ணிட முடியாது. உமக்கு உம்ம 'கம்யூனிட்டி பேக்கிங்’ இருக்கிற வரை யாரும் எதுவும் அசைக்க முடியாது......' - "அப்படி ஒண்ணு இருக்குங்கறதே எனக்குத் தெரியாது சார்! நான் ஒழுங்கா நடந்துக்கலேன்னாத்தான் அதெல் லாம் எனக்குத் தேவை. நான் ஒழுங்கா இருக்கறப்போ கம்யூனிட்டி பேக்கிங்'-என்கிற லேபிள் எனக் கு 'நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமயா சமயங் திளிலே அது எங்களுக்குக் கிடைக்கத்தான் செய்யும்.' - - 'இன்றைய சமூக அமைப்பில் ஜாதிகளினால், வருகிற நன்மை தீமைகளை லாப-நஷ்டங்களை விரும்பினாலும் 'விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவற்றை அடைந்துதான் தீர வேண்டும் போலிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை இனி வருகிற சமூக அமைப்பில் ஏழை-பணக்காரன், உழைக்கிறவன்-உழைக்காதவன் என்று இந்த விதமாகத்தான் ஜாதிகள் கணக்கிடப்படும். இனி ஜாதிகளுக்குப்பதில் வர்க்கங்கள் இருக்கும்......' பார்த்தீங்களா? பார்த் தீங்களா? ஹெச். எம். உம்மைப் பார்த்துப் பயப்பட்றத்துக்கே நீர் அடிக்கடி இப்படி எல்லாம் பேசறதுதான் காரணம். ஒரு தீவிர கம்யூனிஸ்ட் மாதிரிப் பேசlரு ' - 'நியாயம் பேசினால் உடனே அதுக்கு ஏதாவது பேர் சூட்டிப்பிடlங்க. எதையும் பேசாமல் ஊமையாகவா இருக்க முடியும்?' - - - • . . . . . "சமயா சமயங்களிலே அப்படி இருந்தால்தான் இந்தக் காலத்திலே பிழைக்கலாம் போலிருக்கு......'

என்னாலே அப்படிப் பிழைக்க முடியாது சார்: அப்படித்தான் பிழைக்கணும்னு நிர்ப்பந்தம் வந்தால் நான் வேலையை விட்டுவிடுவேன் .' -