84 பொய்ம் முகங்கள் அங்கே ஜமீன்தாரோடு கவுண்டர், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, வேறு சில ஆட்கள் எல்லாம் இருந்தனர். அவ்வளவு: பேரும் ஸ்கூல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இல்லை என்பது சுதர்சனனுக்கே தெரிந்தது. மெமோவில் எழுதி: யிருந்ததற்கும் அங்கு நடப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருப் பதாகத் தெரியவில்லை. கமிட்டிமுன்பு மட்டுமே விசாரிக்கப் படவேண்டிய ஒரு விஷயத்தை ஊரார் முன்பெல்லாம் விசாரிப்பது சுதர்சனனுக்குப் பிடிக்காததோடு பாதிக்கப் பட்ட மற்றொரு நபரும் தன்னை விரும்பாதவருமாகிய கவுண்டரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே தன்னை எப்படி நியாயமாக விசாரிக்க முடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. விசாரணைக்காக ஏ ற் பா டு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுதர்சனனைத் தவிர ஏனைய அனைவ்ரும் உட்கார நாற்காலிகள் போடப்பட்டிருந்தள. சுதர்சன்ன் நடுவாக நிற்க வேண்டியதாயிற்று. அங்கி" ருந்தவர்களில் யாரும் அவனை வா' என்று சொல்லும் சாதாரண முகமன் வார்த்தைக்கும்கூடத் தயாரா யில்லை. - "லெட் அஸ் புரொளிட்...' என்று தலைமையாசிரியர் ஃபைல் கட்டைப் பிரித்துத் தொடங்கியதுமே, நீங்க 'தொடங்கறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு சின்னச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திடுங்க. உங்க மெமோ விலே ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக்கு முன்னாடி நான் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லணும்னுதான் குறிப்பிட்டி' ருந்ததா ஞாபகம்! இப்போ இங்கே கமிட்டி மெம்பர்ஸ்: மட்டும் இல்லே, யார் யாரோ இருக்காங்க. இதை முதல்லே எனக்குத் தெளிவுப்படுத்துங்க” என்று சுதர்சனன் அவர்' களைக் கேட்டான். - - -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/86
Appearance