பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளின் உபவாசம் 99

எப்பொழுதும் அஹிம்சையே ஆகும். காங்கிரஸ் தலைவர் கள் எல்லோரையும் கைதி செய்தது ஜனங்களுக்கு மதி யிழக்கும்படியான கோபத்தை உண்டாக்கிவிட்டது. அதல்ை அவைகளுக்குக் காரணஸ்தர் காங்கிரஸ் அன்று, கவர்ன்மெண்டே. ஆதலால் உடனே தலைவர்களே விடுவித்து அடக்கு முறையை கிறுத்தி சமரசத்துக்கான வழிகளைத் தேடுவதே சரியான காரியம் ” என்று சர்க்கார் காரியதரிசிக்கு எழுதினர்.

சர்க்கார் . அவைகளுக்குக் காரணஸ்தர் காங்கிரஸ்ே தான் என்று கூறினர்களே யன்றி, காந்தியடி களின் இந்தக் கடிதத்தையும் அப்பொழுதே வெளி யிடாமல் அடக்கிவிட்டு இப்பொழுது மகாத்மா உபவாசம் இருக்கும் சமயங்தான் வெளியிட்டார்கள்.

அவர்கள் கடிதம் கிடைத்த உடனேயே வெளியிடா விட்டாலும் நவம்பர் மாதத்தில் திரு. வி. ராஜகோபாலாச் சாரியார் வைஸ்ராயைக் கண்டு பேசினபொழுதேனும் அவ ரிடம் கூறியிருக்கலாம் அல்லவா? அதுவும் இல்லை. அதற்குப் பதிலாக காந்தி அட்டுழியங்களைக் கண்டிக்க வில்லை பார்த்தீர்களா என்று மட்டுமே வைசிராய் கேட்டதாக ராஜாஜி அறிக்கை கூறுகிறது.

‘ கடித விபரம் என்னிடம் கூறியிருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும் ? இப்படிக் கடிதங்களே வெளி யிடாதது குறித்து காந்தியடிகளும் உபவாச சமயம் நான் பார்க்கப் போயிருந்தபொழுது என்னிடம் கூறி வருத்தப் பட்டார் ‘ என்று ராஜாஜி கூறுகிரு.ர்.

அமெரிக்க ஜனதிபதியின் பிரதிநிதியாக வந்திருந்த பிலிப்ஸ் துரையும் இந்தியாவின் தலைமை பிஷப்பும் காந்தி யடிகளைக் காண விரும்பியதற்கு சர்க்கார் அனுமதி கொடுத்திருந்தால் அவர்களும் காந்தியடிகள் ஹிம்சையைக் கண்டிக்கிறார் என்று எழுதியிருப்பார்கள்.