பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளின் உபவாசம் 101

மன்னிப்புக் கேட்க வேண்டுமானல் என் பிழையை எனக்கு நிரூபித்துக் காட்டுங்கள். காங்கிரஸ் கேட்க வேண்டுமானல் எங்கள் எல்லோரையும் சந்திக்கும்படி செய்யுங்கள் ‘ என்று 19-1-43-ல் வைசிராய்க்கு எழுதினர்.

காந்தியடிகள் அட்டுழியங்களைக் கண்டிக்கவில்லை என்று மட்டும் இதுவரை குறை கூறிவந்த வைஸ்ராய் இப்பொழுது எழுதிய பதில் கடிதத்தில் காந்தியடிகளே தான் காரணஸ்தர் என்பதாகக் குற்றஞ் சாட்டவும் ஆரம்பித்தார்.

அதற்குக் காந்தியடிகள் அப்படியால்ை ‘அதற்கு ஆதா ரம் காட்டுங்கள், வெறும் வாய்ச் சொற்கள் போதா, அல் லது நானே நிலைமையைப் பரிசோதிக்கும்படி என்னே விடு வியுங்கள். தேசிய சர்க்கார் அமைத்து நிவர்த்தி செய்

திருக்கக்கூடிய உணவுப் பஞ்சத்தால் லக்ஷக்கணக்கான மக்கள் கஷ்டப்படுவதையும் இந்த அடக்கு முறைகளேயும் காண என்னுல் சகிக்க முடியவில்லை. என் மன

வேதனையை நீக்க நீங்கள் சம்மதிக்காவிட்டால் அதைச் சத்யாக்ரக வழியில் பெற பெப்ரவரி 10-ந் தேதி முதல் மூன்று வாரம் உண்ணுமல் இருக்க உத்தேசிக்கிறேன். இடையில் நீங்கள் இணங்கும்பொழுது உண்பேன் ‘ என்று பதில் எழுதினர்.

இந்தக் கடிதத்துடன் காந்தியடிகள் காங்கிரஸ் அதிகாரத்தைத் தனக்காகக் கேட்காமல் ஜனங்கள் எல்லோருக்குமாகவே கேட்கிறது என்பதையும் அதல்ை தேசிய சர்க்காரை ஜின்ன சாஹிபே அமைத்தாலும் காங் கிரஸ்-க்கு சம்மதமே என்பதையும் எழுதி ஒரு துண்டும் அனுப்பி வைத்தார்.

அதற்கு வைஸ்ராய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பேரால் விநியோகிக்கப்பட்ட அந்தரங்க