பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பொழுது புலர்ந்தது.

குத் தங்கள் விஷயத்தை பரிசில்னே செய்யுமாறு விண் ணப்பித்துக் கொள்ளலாம். அப்படி அதிசீக்கிரமாக விண்ணப்பித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய வசதிகள் அரசாங்கத்தார் செய்து கொடுக்கிறார்கள். அந்தக் கமிட்டி விடுதலை செய்யச் சொன்னல் விடுதலை செய்து விடுகிறார்கள்.

ஆனல் இந்தியாவிலோ போர் வந்துவிட்டது என்று இந்தியப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அதிகாரத்தைக்கொண்டு வைஸி ராய் 150க்கு மேற்பட்ட விதிகள் பிறப்பித்தார். இந்த விதிகளை எல்லாம் ஏழெட்டு சதமான எழுத்து வாசனேயுள்ள இந்த தேசத்தார் அறிந்து அதன் வலையில் அகப்பட்டுக் கொள் ளாமல் நடப்பது எப்படியோ, ஈசனுக்கே தெரியும். அவைகளிலும் 26-வது விதி விசேஷமானது. அதன்படி தான் ஆயிரக்கணக்காவர்கள் போர் முயற்சிக்கு விரோதம் என்று கைதி செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு விசா ரனேயும் கிடையாது, விஷயத்தை பரிசீலனை செய்ய ஆலோசனை சபையும் கிடையாது.

1943 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலுள்ள ஹை கோர்ட்டுகளுக்கு மேலுள்ள பெடரல்கோர்ட்டார் 26-வது விதி சட்ட விரோதமானது, வைசிராய்க்கு அதைச் செய்ய அதிகாரம் கிடையாது என்று தீர்ப்புச் செய்தார் கள். அப்படியானல் அந்த விதியின்படி அன்று தினத்தில் சிறையிலிருந்த காந்தியடிகள் உள்பட 9 ஆயிரம் பேரை யும் உடனே விடுதலே செய்ய வேண்டியதாகும்.

ஆனல் வைஸி ராய்க்கு யாரும் ஆட்சேபிக்க முடியாத அவசரச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் ஒன்று யுத்த ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. அதை உபயோகித்து அவர் 26-வது விதி சட்டவிரோதயன்று என்று ஒரு அவசரச் சட்டம் செய்து அந்த 9 ஆயிரம்