பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

லின்லித்கோ சாதித்தவை

ஆகஸ்ட் இரண்டாம் தேதி லின்லித்கோ பிரபு மத்திய சட்டசபையாரிடம் விடைபெற்றுக்கொள்ளும் பொழுது தாம் தம்முடைய ஏழுவருஷ ஆட்சியில் சாதித்த அரும்பெரும் காரியங்களேக் குறித்துப் பெருமை பேச லானர். அவர் கூறியவை அனேத்தையும் ஆராய்வது மணற்சோற்றில் கல் தேடுவதுபோலவே யிருக்கும். ஆயினும் இரண்டொன்றைக் கவனிக்க வேண்டியது அவசியமே ஆகும்.

அவர் இந்தியாவையும் இங்கிலாந்தையும் இணைத்து விடுவதற்காக அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டாராம். அதனுல்தான் அந்தத் தேசங்களிடையே இதற்குமுன் ஏற்படாத மனக் கசப்பு இப்பொழுது ஏற்பட்டிருக் கிறதோ ?

பிரிட்டிஷார் அதிகாரத்தை இந்தியர் கையில் கொடுத்துவிடத் தயாராயிருக்கிறார்களாம்! அப்படி யானுல் காந்தியடிகளையும் காங்கிரஸ் கமிட்டியாரையும் கைதி செய்வானேன்? கிர்வாக சபையில் அதிகமான இந்தியர்களைச் சேர்த்துக் கொண்டதுதான் அதிகாரத் தைக் கொடுக்க விரும்புவதின் அறிகுறியோ?

அதிகாரத்தைக் கொடுக்கத் தடையா யிருப்பது நம்முடைய ஒற்றுமைக் குறைவாம்! அப்படியால்ை