பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேவல் பிரசங்கம் 139.

அதன் பொருள் இனிமேல் யாரும் கொள்ளையடிக்கக்

கூடாது, இதற்கு முன் கொள்ளையடித்ததைப் பறிக்க

மாட்டோம் என்பது தானே?

ஆல்ை அமரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்ட் சர்வதேச தொழில் ஸ்தாபனம் சகலருக்கும் சுதந்திரமும் தொழி அலும் அளிப்பதாகக் கூறி பிலடல்பியா சாஸனம்’ தயாரித்ததை அங்கீகரித்து ‘ உலகத்தில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாடுகளுக் கெல்லாம் இந்த சாஸனத்தில் கண்ட லட்சியங்கள் கைகூடும்படி செய்ய அமரிக்கா தீர்மானித்திருக்கிறது” என்று கூறினர்.

அதுபோலவே அமெரிக்கா மந்திரி கார்டல் ஹல் “ அமரிக்கா அடிமை ஜனங்களே எல்லாம் சுதந்திரத்துக் காக உழைக்கும்படி உற்சாகம் ஊட்டுகிறது. அதுவே தான் அது எந்தக் காலத்திலும் எல்லா இடங்களிலும் தவருமல் செய்து வந்திருக்கும் காரியம்.” என்று கூறினர். “ஆல்ை இவர்கள் சர்க்கரை என்ற உடன் இனித்து விடாது என்பதை அறிந்து பேசுகிரு.ர்களா? அல்லது அறியாதது போல் பேசுகிறார்களா? ஆயிரம் ரூபாய் பின்னல் கொடுப்பதாகக் கூறுவதினும் ஐந்து காசு இப்பொழுது கொடுப்பதே நம்பிக்கை உண்டாக்குவதாகும். அட்லாண்டிக் சாஸனம் எங்களுக்கும் உண்டா என்ற கேள்விக்கு இதுவரை பதில் உரையாததால் இவர்கள் “ எல்லோருக்கும் ” என்னும்போது வெள்ளையர் எல்லோருக்கும் ” என்று தானே பொருள் கொள்ள வேண்டும் ? இதைவிட உள்ளொன்று வைத்து புற மொன்று பேசாத சர்ச்சில் பேச்சே உத்தமம் அல்லவா?

சர்க்கார் விஷயம் இதுவானல் சர்க்கார் துணையான ஜின்ன சாகிப் விஷயம் என்ன? காங்கிரஸைப்பற்றி