பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பொழுது புலர்ந்தது

பிரதேசங்களைப் பிரிப்பதும் ஒட் எடுப்பதும் பிரிட் டிஷ் சர்க்கார் இருக்கும்பொழுதே நடத்திவிட வேண்டும் என்று ஜின்ன சாகிப் கூறுகிருரே, அப்படியாளுல் பிரிவினே என்பது பிரிட்டிஷார் தேசத்தின்மீது திணித்த தாக இருக்குமே தவிர ஜனங்களாக நியாயம் என்று உணர்ந்து பிரித்துக் கொடுத்ததாக இராது, அது பிற்கால வாழ்வுக்கு நல்லதா? என்று காந்தியடிகள் கேட்டார்.

இப்படிப் பிரிட் டிஷார் மூலம் பிரிவினை நடத்த விரும்பி யதன் காரணம் ஜின்வுைக்கு இடைக்கால சர்க்கார் இந்து சர்க்காராய் இருந்துவிடும் என்ற பயமேயாகும். ஆனல் காந்தியடிகள் நாம் ஒத்துக்கொண்ட பிறகு மற்றக் கட்சி யாருடன் கலந்து பேசி எல்லோருக்கும் திருப்தியான முறையிலேயே இடைக்கால சர்க்காரை அமைப்போம் என்று கூறியதை ஜின்ன சாகிபும் ஒப்புக்கொண்டார். அப்படியிருக்க இடைக்கால சர்க்காரைப் பற்றி பயப்படு வானேன் ?

அதுவும் தவிர ஹிந்து மெஜாரிட்டி என்பது வெறும் பிரமையேயாகும். ஹிந்துக்கள் பெரும்பான்மையோராக இருந்துவிட்டால் அதைக்கொண்டு அவர்கள் எல்லோரும் ஒரே கட்சி என்று கூறமுடியுமா? இப்பொழுதுள்ள சட்ட சபைகளிலும் ஹிந்துக்கள் அதிகம்தான், ஆயினும் அவர்களுக்குள் எத்தனே கட்சி பேதங்கள் உள ? இடைக் கால சர்க்காரும் இப்பொழுது சமரசமாக அமைக்கும் முறையில்தானே காரியங்களே நடத்துவார்கள் ?

அந்த சர்க்காரையும் அணியாயமான முறையில் நடக்க

முடியாதபடி தடுத்துவிடக் கூடிய ஏற்பாடுகளே முன் கூட்டிச் செய்துவிட முடியாதா ?