பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பொழுது புலர்ந்தது

தொழில்களே விருத்தி செய்வோம் என்றால் அதற்குப் பலவிதமான இடையூறுகள் ஏற்படுத்த முயன்றார்கள். அதற்கும் மேலாக அரசாங்கத்திடம் அதிகச் செல்வாக் குள்ள கெயின்ஸ் பிரபு என்பவர் இங்கிலாந்து அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்பது போல யோஜன கூற ஆரம்பித்தார். இவ்விதம் பணக் கார தேசம் ஏழை தேசத்தின் கடனேக் கொடுக்க மறுக் கும் வினோதம் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில்தான் காண முடியும்.

கெயின்ஸ் பிரபு இதுமட்டுமா செய்தார்? அமெரிக் காவுக்குச் சென்று யுத்தத்திற்குப் பின் இந்தியாவுடன் வர்த்தகம் செய்து லாபமடைவதை அமெரிக்காவுடன் பங்கு போட்டுக்கொள்ளும் விஷயமாக ஒப்பந்தம் செய்த தாகவும் செய்தி வந்தது.

பிரிட்டிஷ் வர்த்தக போர்டின் தலைவர் டால்டன் துரை பிரிட்டன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை ஒன்றரை மடங்கு அதிகமாகப் பெருக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு யோசனை கூறினர். அது போலவே பிரிட்டனில் நடைபெறும் 50 விதமான கைதொழில்களின் பிரதி கிதிகள் ஒன்று கூடி யுத்தத் திற்குப் பின் எந்த விதமான ஏற்றுமதிகளே இந்தியாவுக்கு அனுப்பலாம் என்பது பற்றி யோஜித்தார்கள். இந்தக் காரியங்கள் எல்லாம் வேவல் துரை கூறும் இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளோ என்னவோ அதை அவர்தான் அறிவார்.

இந்தவிதமாக இந்தியாவின் பொருளாதாரத் துறை யில் காரியங்கள் நடைபெற்று வந்ததுபோலவே அரசியல் துறையிலும் நடைபெற்று வந்தன. இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்க ஆத்திரப் பட்டுக்கொண்டு இருப்பது போல இந்தியா மந்திரியும் வைசிராயும் காட்டிக்கொண்