பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 199

வில்லை. ஜப்பானிய அதிகாரிகள் இந்தியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ளவில்லை. ஜப்பான் இந்திய வீரர்களேத் தங்கள் ஏகாதிபத்திய ஆசைக்காக உபயோ கிக்க எண்ணுவது போலவே தோன்றிற்று.

இது தளபதி மோகன் சிங்குக்குப் பிடிக்கவில்லை. ஜப்பான் சர்க்காருடன் தர்க்கம் செய்தார். அதன் பயனக ஒருவேளை அவர்கள் தம்மைக் கைதி செய்யலாம் என்று எண்ணினர். அதல்ை தம்மைக் கைதி செய்தால் உடனே இராணுவத்தைக் கலைத்து விடும்படியாக உத் யோகஸ்தர்களிடம் கூறினர்.

அப்படியே 1942 டிஸம்பர் இறுதியில் அவர் கைதி செய்யப்பட்டார். ராணுவமும் கலந்து போயிற்று. ராஷ் பிகாரி போஸ் எப்படியாவது ஜப்பானுடைய உதவி யுடன் இந்தியாவை விடுதலை செய்துவிட வேண்டும் என்று விரும்பியதால் மறுபடியும் இந்திய தேசிய ராணு வத்தை அமைக்கப் பெரு முயற்சிகள் செய்து பார்த்தார். ஆல்ை அவை பயன் பெருமல் போயின.

சுபாஷ் சந்திர போஸ் விஜயம்

இந்திய வீரர்களுக்கெல்லாம் மறுபடியும் இராணு வம் அமைக்க ஆசைதான். ஆல்ை தங்களுக்குத் தகுந்த தலைவர் இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். அந்த நிலைமையில் 1943 பெப்ரவரி மாதத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் சில மாதங்களில் மலேயாவுக்கு வந்து சேர்வார் என்ற செய்தி வந்ததும் வீரர்கள் எல்லோரும் சந்தோஷம் அடைந்தார்கள்.

அவர்கள் இந்தியாவில் ராணுவத்திலிருந்தபோது அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். யுத்தம் வந்தபின் அவர் பெர்லினிலிருந்து பேசிய உணர்ச்சி மிகுந்த பிரசங்கங்களைக் கேட்டிருந்தார்கள் அவர்