பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பொழுது புலர்ந்தது

அதில் சாதாரண வீரர்களுடைய சாமர்த்திய மட்டு மன்று, இந்தியத் தளபதிகளுடைய திறமையும் விளங்கி விட்டது. இந்தியர்களுக்குப் போர் புரியவும் தெரியும், போர்க்கு வேண்டிய சேனையைத் தயாரிக்கவும் தெரியும்.

அதுமட்டுமா ? சந்தர்ப்பம் அளித்தால் போர்க்கு வேண்டிய ஆயுதங்களைத் தயாரிக்கவும் தெரியும் ? நம் முடைய நாட்டிலுள்ள விஞ்ஞானிகள் அவற்றுள் சில முக்கியமானவற்றைச் செய்து கொடுத்திருப்பது அரசாங் கத்துக்குத் தெரியும். அமரிக்காவில் சர்க்கார் யுத்த காலத்தில் யுத்தத்துக்கு வேண்டிய சாமான்களைக் குறித்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்காக விஞ்ஞான நிபுணர் களின் தலைமையில் பல ஆராய்ச்சி இலாகாக்காரர்கள் அமைத்திருந்தார்கள். அவைகளில் மூன்று இலாக்காக் களின் தலைவர்களாக இருந்தவர்கள் இந்திய விஞ்ஞானி களே யாவார்கள். ஆதலால் காமில்லாமல் இந்திய ராணுவ வீரர்கள் எதுவும் செய்யமுடியாது என்று எண்ணுவதையும் இனிமேல் விட்டுவிட வேண்டும் என் பதையும் அரசாங்கத்தார் அறிந்தார்கள்.

(3) 1942 ஆகஸ்ட் எழுச்சியை அடக்கிவிட்டது உண்மைதான். ஆனல் இந்திய மக்கள் காந்தியடிகளின் அஹிம்சா தர்மத்தை அனுஷ்டிக்கத் தவறிவிட்டாலும் வெறும் கோழைகள் அல்லர் என்பதை உலகமறிய கிதர் சனமாக்கிவிட்டார்கள். என்று கோழைகள் அல்லரோ, அன்று அவர்கள் ஹிம்சை முறையிலானலும் அஹிம்சை முறையிலானலும் சுதந்திரமாகிய பிறப்புரிமையைப் பெற்றே தீர்வர். நேதாஜியின் தலைமையின் கீழ் ஹிம்சை முறைக்குரிய தகுதியைக் காட்டிவிட்டார்கள். மகாத்மா ஜியின் தலைமையின்கீழ் அஹிம்சா முறைக்குரிய தகுதி யைக் காட்டிவிட்டார்கள். இனிமேல் அரைக்கணமும் அடிமையாக இருக்கமாட்டார்கள்.