பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பொழுது புலர்ந்தது

பின் பிரதிநிதிகள், வந்து ஒட்டுச் செய்பவர்களில் மெஜா ரிட்டியாருடைய சம்மதம் பெறுவது தேவையாகும்.

(9) வகுப்பு கலன் சம்பந்தமான விஷயம் என்பதைத் தலைவரே முடிவு செய்வார். எந்த வகுப்பிலேனுமுள்ள பிரதிநிதிகளில் பெரும்பாலோர் விரும்பினல், அவர் முதலில் பெடரல் கோர்ட்டைக் கலந்துகொள்ள வேண்டும்.

(10) இந்தப்படி வகுக்கப்படும் அரசியல் அமுலுக்கு வந்த பிறகு அமையும் எந்த மாகாணச் சட்ட சபையாவது தானுள்ள தொகுதியைவிட்டு வெளியேறி விடத் தீர்மா னித்தால், அந்த மாகாணம் வெளியேறலாம்.

(11) மைனரிட்டி நலன் யோசனைக் கமிட்டி, ஜீவா தாரமான உரிமைகளையும் மைனரிட்டிகளுக்கு வேண்டிய பாதுகாப்புக்களையும் அரசியல் கிர்ணய சபைக்குக் கூறும். (12) பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரத்தைத் துறந்து விடுவதால், அவர்கள் இந்திய யூனியன் அரசியல் அமைப் புச் சபையுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

இடைக்கால சர்க்கார்: முக்கியமான அரசியல் கட்சி களின் ஆதரவைப் பெற்ற இடைக்கால சர்க்காரை உடனே அமைக்கவேண்டியது அவசியமாகும். அதற்கான ஏற்பாடுகளை வைசிராய் செய்து கொண்டிருக்கிரு.ர். ராணுவம் உட்படச் சகல விஷயங்களையும் இந்தியரே நிர்வகிப்பார்கள். அந்தச் சர்க்காருடன் பிரிட்டிஷார் பரிபூரணமாக ஒத்துழைப்பார்கள்.

இந்த யோசனைகள் எல்லோர்க்கும் திருப்தி தந்து விடா. ஆயினும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொண்டால், சுதந்தரத்தைச் சீக்கிரமாகவும் அமைதி யான முறையிலும் அமைத்துவிடலாம். இல்லாவிட்டால், என்ன என்ன குழப்பங்களும் கஷ்டங்களும் இந்திய மக்களுக்கு உண்டாகுமோ யார் அறிவார்? ஆதலால்,