பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 239

==

தைத் தயாரிக்கக்கூடிய அரசியல் கிர்ணய சபையை கிறுவுவதற்கான கோக்கத்துடன் கூடிய ஒரு சிறந்த அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார்கள். அவர் களுடைய ஒரே லட்சியம் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பிரிட்டிஷ் ஆட்சியை முடித்து விடுவதேயாகும்.

உள் நாட்டு யுத்தம் என்று சொல்லக் கூடிய அளவில் சச்சரவுகள் நேராதபடி இந்தியாவை ஏக ஐக்கிய தேச மாக இருக்கும்படி செய்துவிட்டுப் போகவே விரும்பு கிரு.ர்கள்.

அவர்களுடைய அறிக்கை பிரிட்டிஷ் ஆட்சியைத் துறந்துவிடுவதற்கான பிரதம அறிகுறியாக இருப்பதால் அவர்கள் நம்முடைய மனமார்ந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

அப்படியில்லை என்று நிரூபிக்கப்படும் வரை அவர் களுடைய பேச்சில் நாம் நம்பிக்கை வைக்கவே வேண்டும்.”

அதன் பின் இந்தியாவிலுள்ள மாகாணங்களை ஹிந்துக்கள் மெஜாரிட்டியாகவுள்ள தொகுதி என்றும் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகவுள்ள தொகுதி என்றும் முஸ்லிம்கள் அதிகத் தொகையினராகவுள்ள தொகுதி என்றும் பிரித்திருப்பதைக் குறித்துக் கீழ்கண்ட வாறு எழுதினர் :

“ மாகாணங்கள் விஷயத்தில் அவர்கள் கூறும் யோசனை யாது? சீக்கியர்களுக்குப் பஞ்சாப் ஒன்றுதான் அவர்களுடைய தாய் நாடு. அப்படியிருக்க அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு மாருகப், புதிதாக உண்டாக்க எண்ணும் வடமேற்குத் தொகுதியாகிய ‘ பி ‘ ராஜ்யத் கைத் தங்கள் தாய்காடாக எண்ணுவதெப்படி ?