பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் 25

விடுதலை தினம் என்றால் எல்லா தேசங்களும் கொண்டாடிவரும் தேசவிடுதலை தினமா? தேசம் இன் னும் விடுதலை அடையவில்லையே, விடுதலை தினம் கொண் டாடுவது எப்படி ? அல்லது பிரிட்டிஷ் சர்க்கார் முஸ்லிம் களிடமாவது அதிகாரத்தை மாற்றிக் கொடுத்துவிட்டார் களா ? இவை எல்லாம் ஒன்றுமில்லை. காங்கிரஸ் மந்திரி கள் முஸ்லிம்களே இம்சித்து வந்தார்களாம், இப்பொழுது அந்தக் கொடுங்கோன்மையிலிருந்து அவர்கள் விடுதலே பெற்றுவிட்டார்களாம்.

ஆனல் மெளலான அபுல்கலாம் ஆஸாத் - “ காங் கிரஸ் மந்திரி சபைகள் முஸ்லிம்களுக்கு அதிே செய்தார் கள் என்பது ஒரு பொய் மலேயே யாகும்.” என்று கூறினர்.

அப்படி அநீதிகள் செய்திருந்தால் அவைகளே எடுத் துக் கூறுங்கள் என்று கேட்டார்.

மந்திரிகள் முஸ்லிம்களுக்கு அதிே செய்தால் அவை களைத் தடுப்பதற்காக கவர்னர்களுக்கு விசேஷ அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதே, அந்த அதிகாரத்தை எந்த கவர்னரும் ஒரு தடவைகட்ட உபயோகிக்கவில்லேயே, அதன் பொருள் என்ன? சிறு பிழை நேர்ந்தாலும் அதைப் பெரிதாக்கி இந்தியர்க்கு அரசாளத் தெரியாது என்று பறை சாற்றக் காத்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் கவர் னர்கள் காங்கிரஸ் மந்திரிகள் முஸ்லிம்களுக்குத் தீமை செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா ?

இதெல்லாம் ஜின்ன சாகேப் காதில் விழவில்லை. அது எப்படி விழும்? உறங்குகிறவனே எழுப்பலாம், உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பவனே எழுப்புவது எப்படி? அவர் விடுதலை தினம் கொண்டாடியதோடு கிற்காமல் இன்னென்று செய்தார். அது அதனிலும் அதிகமாக வருந்தத்தக்க பிற்போக்கான காரியமாகும்.