பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனக் கோரிக்கை 35

ஆகவே 1940-ம் வருஷத்தின் மத்தியில் பிரிட்டன் தனியாக நின்றே போர்புரியும் அதிகக் கஷ்டமான நிலை மையில் இருந்துகொண் டிருந்தது.

அதல்ை நமது தேசத்தில் அப்பொழுது எங்கும் பய பீதி உண்டாய்விட்டது. பிரிட்டன் நம்மைக் காப்பாற்ற முடியுமோ என்ற சந்தேகம் உதித்தது. அதுமட்டுமன்று ; கம்மைக் காக்கா விட்டாலும் பாதகமில்லை, பிரிட்ட னுக்குத் தோல்வி கிடைத்தால் போதும் என்ற எண்ணங் கூடத் தோன்றலாயிற்று. நம்மை அடிமையாக்கி வைத் திருக்கும் அரசாங்கத்துக்கு இது வேண்டியதுதான் என்ற சந்தோஷமும் தலைகாட்ட ஆரம்பித்தது.

ஆல்ை இதைக் கண்டதும் பண்டித நேரு “ அப் படியா, அது தவறு, கம்மை யாரேனும் தாக்கவந்தால் நாம் சும்மா யிருக்கக் கூடாது, எதிர்த்துத் துரத்தவேண்டும், அத்துடன் அச்சமயத்தில் ஆங்கிலேயர்க்கு எவ்வித ஹானியும் எற்படாதவாறு பார்த்துக்கொள்வதே நமக்குப் புகழ் தருவதாகும் ‘ என்று இந்திய மகா ஜனங்கட்கு எச்சரிக்கை செய்தார்.

பிரிட்டனில் சேம்பர்லேன் பிரதம மந்திரி பதவியி லிருந்து விலகிக் கொண்டார். சர்ச்சில் முதல் மந்திரி ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு புதிய மந்திரி சபை அமைத்தார். யுத்தத்தைச் சரியாக கடத்துவதற்குப் போதுமான திறமை உள்ளவர் சர்ச்சில் ஒருவரே என்று உணர்ந்தே அந்த தேசத்தின் பிரதிநிதிகள் ராஜ்ய பாரத்தை அவருடைய கையில் ஒப்புவித்தார்கள்.

அவர் அமைத்த மந்திரி சபையில் அமரி என்பவர் இந்தியா மந்திரி பதவி பெற்றார். அவர் எப்பொழுதும் சர்ச்சிலுக்கு வலது கைபோல் இருந்து வருபவர். ஆயினும் 1935-ம் வருஷத்தில் இந்திய அரசியல் சட்டம் பார்லி மெண்டில் விவாதிக்கப்பட்ட சமயத்தில்- கானடா