பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்யாக்ரகம் 49

க்ரகம் செய்யலாகாது. அத்துடன் சத்யாக்ரகம் செய்யும் பொழுது அதனல் ஜனங்கட்கு எவ்வித இடைஞ்சலும் உண்டாகாமல் கவனமாக கடந்துகொள்ள வேண்டும். சேனைகள் வெடிமருந்து உள்ள இடங்களுக்குச் சமீபத்தில் செல்லலாகாது-இப்படிப் பல விதிகள் ஏற்படுத்தினர்.

சத்யாக்ரகம் செய்பவர்கள் எல்லோரும் ஒரேவித மான பிரசங்கமே செய்யவேண்டும், அதைச் செய்யுமுன் அது செய்ய உத்தேசிக்கும் இடத்தையும் காலத்தையும் குறித்து முன்கூட்டி ஜில்லா மாஜிஸ்டிரேட்டுக்கு அறிவித்துவிட்டே செய்யவேண்டும். அந்தச் சமயம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் நடைபெறலாகாது என்று உத்தரவிட்டார்.

ஒரு சமயம் லாகூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபொழுது-” இப்படிச் செய்தது தேசத்துக்குத் |lங்கு செய்ததாகும் இந்த இயக்கம் சர்க்காருக்குக் கஷ்டம் கொடுப்பதற்காக எம்பட்டதன்று தேசத்தின் மானத்தைக் காக்க யொகம் செய்வதற்காகவே ஏற்பட்ட தாகும், இதைச் சிறிதும் மறந்துவிடலாகாது “-என்று கண்டித்து எழுதிர்ை.

ஆகவே அமெரிக்க அருதிபதி ரூஸ்வெல்ட் பிரகடனம் செய்த நான்கு சுதந்திரங்களில் ஒன்றாகிய பேச்சு சுதந்தி IJ த்துக் காகவே இந்த சத்யாக்ரகம் கடைபெற்றது.அதுவும் சர்க்கார் கொள்கையைக் கண்டிப்பதற்காக நடைபெற் முலும், யாருக்கும் இடைஞ்சல் இல்லாத விதத்தில், சாத் விக விஷயம் நன்கு அறிந்த காங்கிரஸ்காரர்களால் மட்டுமே தனித்தனியாகச் செய்யப்பட்டது.

ஆயினும் அதற்குச் சர்க்கார் அளித்த பதில் யாது? பேச்சு சுதந்திரம் அளிக்கச் சம்மதித்தார்களா? இல்ஆல. அடக்கு முறையே அவர்கள் அளித்த பதில்.

563—4