பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பொழுது புலர்ந்தது

டிருந்ததால் பிரிட்டிஷ் சர்க்கார் அதுபற்றி அதிகக் கவலே யடைந்தார்கள். எத்தனையோ புதிய புதிய முறைகள் கையாண்டும் எள்ளளவு பயனும் உண்டாகாது போகவே இறுதியில் டர்ஹாம் பிரபுவை ஏதேனும் விமோசன மார்க்கம் உண்டா என்று காணும் பொருட்டு கானடா விற்கு அனுப்பி வைத்தார்கள். அவர் விஷயத்தை நன்கு பரிசீலனை செய்த பின்னர், சுதந்திரம் அளித்தாலன்றி ஒற்றுமை உதிக்காது என்று தைரியமாய் யோசனை கூறினர். அப்படியே சுதந்திரம் கொடுத்ததும் ஒற்றுமை உண்டாய் விட்டது. அதுபோலவேதான் தென் ஆப்பிரிக் காவிலும் பிரிட்டிஷாரும், டச்சுக்காரரும் சுதந்திரம் பெற்றதும் இணைபிரியாத சகோதரர்களாய் விட்டார்கள். அந்த அற்புதம் இந்தியாவிலும் நடத்தலாகாதோ? அப்படிக்கின்றி இப்பொழுதே ஒற்றுமையைக் காட்டுங் கள் என்று கூறுவது ஸர் என். என். ஸர்க்கார் கூறியது போல- உஷ்ணமான ஐஸ் கட்டி கொண்டுவா, ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என்று கூறுவதுபோலவே இருக்கிறது. இது உண்மையான பேச்சா ?

சரி, இப்பொழுதே ஒற்றுமையை உண்டாக்கி விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் சுயராஜ்யம் தரச் சம்மதிப்பார்களா? ஒன்று சேர்ந்து கேட்டதெல்லாம் கொடுத்து விட்டார்களோ ?

கிலாபத் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்திருந்தார்களே, பெற்றது என்ன?

இரண்டாவது வட்டமேஜை மகாகாட்டில் இந்துக் களும் முஸ்லிம்களும் ஒன்றுசேர்ந்து கொடுத்த அறிக்கைக் குக் கிடைத்தது என்ன ?

மத்திய சட்ட சபையில் காங்கிரஸ் மெம்பர்களும் முஸ்லிம் லீக் மெம்பர்களும் சேர்ந்து கிராகரித்த பட்ஜெட்